வனிதாவை தூக்க பிக் பாஸுக்குள் நுழைகிறது போலீஸ்..!

இரண்டாவது கணவரின் மகளை கடத்தி வந்ததாக நடிகை வனிதா விஜயகுமார் மீது வழக்குப் பதிவு செய்துள்ள தெலங்கானா மாநில காவல் துறையினர், அவரை கைது செய்ய பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்கும் வீட்டுக்கு வெளியே காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.நடிகர் விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார்..! இவருக்கு தற்போது வரை 3 கணவன்கள்...! இவரது முதல் கணவர் நடிகர் ஆகாஷுக்கு ஒரு மகன் உள்ளார். வனிதாவின் இரண்டாவது கணவர் தொழில் அதிபர் ஆனந்தராஜுக்கு 10 வயதில் ஒரு மகள் உள்ளார். அவரை பிரிந்து 3வதாக நடன இயக்குனர் ராபர்ட் உடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். தற்போது அவரையும் பிரிந்து போதிய படவாய்ப்பு இல்லாமல் தவித்த வனிதா, நடிகர் நடிகைகளுக்கான 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் போல நடத்தப்படும் தனியார் தொலைக்காட்சியின் பிக் பாஸ் என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இரண்டாவது கணவரை வனிதா பிரிந்த சூழ்நிலையில் அவர்களது மகள் தந்தையுடன் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சில மாதங்களுக்கு முன்பு தனது மகளைப் பார்க்க ஐதராபாத் சென்ற வனிதா, கணவர் ஆனந்தராஜுக்குத் தெரியாமல் மக்களை சென்னைக்கு அழைத்து வந்துவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தொழில் அதிபர் ஆனந்தராஜ் அளித்த புகாரின் பேரில், தெலங்கானா காவல்துறையினர் கடத்தல் வழக்குப் பதிவு செய்து வனிதாவை தேடி சென்னைக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். வனிதா தலைமறைவாக இருப்பதாகக் கூறி வழக்கை விசாரிக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தனர்.இந்த நிலையில், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று, உள்ளேயும் சக போட்டியாளர்களுடன் தகராறு செய்து வருவதை அறிந்த 2வது கணவர் ஆனந்தராஜ், மீண்டும் தெலங்கானா காவல்துறைக்கு தகவல் அளித்தார். இதையடுத்து கடத்தல் வழக்கில் தொடர்புடைய வனிதா விஜயகுமாரை கைது செய்வதற்காக தெலங்கானா காவல்துறையினர் சென்னை வந்தனர். பூந்தமல்லியில் பிக்பாஸ் அரங்கம் அமைக்கப்பட்டுள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டிக்கு சென்று விசாரணை நடத்தினர்.வனிதாவை கைது செய்ய ஒத்துழைக்குமாறு, சம்பந்தப்பட்ட டிவி நிகழ்ச்சி ரிப்பாளரிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் முடிவு எட்டப்படாததால் நசரத்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்று தமிழக காவல்துறையினரிடம் உதவி கோரினர். போலீசார் டிவி நிகழ்ச்சித் தயாரிப்பாளரை அழைத்து வனிதாவையும், கடத்தப்பட்ட சிறுமியையும் போலீசிடம் ஒப்படைக்க அறிவுறுத்தி உள்ளனர். கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட நடிகை வனிதாவை ஒப்படைக்க மறுக்கும் பட்சத்தில், பிக் பாஸ் அரங்கத்திற்குள் புகுந்து வனிதாவை கைது செய்து அழைத்துச் சென்று குழந்தையை மீட்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்கள் பதுங்கும் இடமாகவும் அவர்களை பாதுகாக்கும் இடமாகவும் பிக் பாஸ் வீடு மாறி உள்ளதாக தெலங்கானா காவல்துறையினர் குற்றஞ்சாட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)