மாண்புமிகு முதல்வர்&துணை முதல்வர், மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்களுக்கு நன்றி! நன்றி!

அச்சு ஊடக பத்திரிகையாளர்கள் நீண்ட கால கோரிக்கையான பத்திரிகையாளர் நல வாரியம் அமைத்திட, தொடர்ந்து ....பல போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், மேலும் அரசுக்கு கடிதம் மூலமாக வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல அனைத்து பத்திரிகையாளர்கள் வேண்டுகோளை ஏற்று இன்று நடந்த தமிழக சட்டமன்றப் பேரவையில் மானிய கோரிக்கை தினத்தில், பத்திரிகையாளர் நல வாரிய குழு அமைக்கும் அறிவிப்பை வெளியிட்ட, வெகு விரைவில் பத்திரிகையாளர்களுக்கான நல வாரியம் அமைத்து தரப்படும் என, கூறிய அமைச்சர் அவர்கள், தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள செய்தியாளர் அறையில் செய்தியாளர் தவிர்த்து ஏனையோர் வருகையை கண்காணித்து கட்டுப்படுத்தும் வகையில் புதிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் எனவும், செய்தியாளர் அறையில் குடிநீர் வசதி மேம்படுத்தும் வகையில் (RO Plant System) சிஸ்டம் அமைக்கப்படும், புதிய எல். இ.டி தொலைக்காட்சி பெட்டி வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்ட அமைச்சர் அவர்களுக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் C.ராஜு அவர்களுக்கும், அனைத்து பத்திரிகையாளர்கள் சார்பாகவும், அனைத்து பத்திரிகையாளர்கள் யூனியன் மற்றும் சங்கத்தின் சார்பாகவும், எங்களது மனமார்ந்த தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன்,(3579/CNI) நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)