தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் நாளை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகதெரிவித்துள்ளனர்

தமிழகம் முழுவதும் நாளை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக, தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், தண்ணீர் எடுக்க இடம் இல்லை என்பதாலும், கிடைக்கும் இடங்களில் தண்ணீர் எடுக்க எதிர்ப்பு கிளம்புவதாலும் வாகனங்களை இயக்குவதை நாளை முதல் நிறுத்துவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் திருவள்ளூர், விழுப்புரம், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தண்ணீர் லாரிகள் சிறைபிடிக்கப்பட்டிருப்பதாக சங்கத்தின் மாநிலத் தலைவர் நிஜலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார். தண்ணீர் கிடைக்கும் இடத்தை காட்டினால், தண்ணீர் எடுத்து விநியோகிக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார் ஏற்கெனவே தமிழகம் முழுவதும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தை அறிவித்திருப்பது மக்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்