உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு அரசு கல்லூரிகளில் 81 புதிய பட்டப் படிப்புகள்

 சட்டப் பேரவையில் உயர்கல்வித்துறை மீதான மானியக் கோரிக்கையில் நடந்த விவாதத்தில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு, உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், உயர்கல்வித்துறைக்கான 11 அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விபரம் வருமாறு: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்பில் புதியதாக 81 பாடப் பிரிவுகள் தொடங்கப்படும். - * பாலக்கோடு, மோகனூர் ஆகிய இடங்களில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் ரூ.37 கோடியே 7 லட்சம் மதிப்பில் ஆய்வகங்கள், நூலகம், பயிற்சி பட்டறை, வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்படும். * சென்னை மாநிலக் கல்லூரியில் உள்ள பெண்கள் விடுதி புதுப்பிக்கப்படும். மேலும் ரூ.9 கோடியே 90 செலவில் புதிய பெண்கள் விடுதி கட்டப்படும். * பாரதியார் பல்கலைக் கழகத்தில் ரூ.1 கோடியே 15 லட்சம் செலவில் அதிநவீன தகவல் தொழில் நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் பொருத்தப்படும். * இணைய வழி கல்வித்திட்டத்தின் கீழ், பாடங்கள் நடத்தும் திட்டத்தில் ரூ.50 லட்சம் செலவில் பாடங்களின் வடிவமைப்பு, வளர்ச்சி முறைகள் தொகுத்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். * தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தின் கற்போர் உதவி மையம், தேர்வு மையம் ரூ.50 லட்சம் செலவில் நிறுவப்படும். * அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் 100 மாணவர்களை தேர்வு செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டம் ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும். * 18 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தேசிய தர மதிப்பீடு மற்றும் தகுதிக் குழுவின் தரமதிப்பீட்டு சான்று பெற வசதியாக ரூ.63 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். * தொழில் தொடங்குவது , தொழில் சார்ந்த ஆலோசனை பெறுவது உள்ளிட்ட பல்வேறு தொழில் சார் பணிகளுக்காக அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் அடைகாப்பு மையம் (Establishment of Incubation center) ரூ.2 கோடியே 34 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)