அரசு நிலத்தில் 5 ஆண்டு குடியிருந்தால் பட்டா
சென்னை,- அரசு நிலங்களில் 5 ஆண் டுகள் குடியிருந்தால் அவர்க ளுக்கு பட்டா போட்டு தரப்படும் என்று சட்டப் பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலளித்து பேசியதாவது:அரசு நிலங்களில் குடியி ருப்பவர்களின் விபரங்கள் கண்டறியப்பட்டு வருகிறது. அப்படி அரசு நிலத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் குடி யிருப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடு இழந்தவர்களுக்கு வீடு கட்டி கொடுக்கும் திட்டத் தின் கீழ் ஒரு லட்சம் வீடுகள் கட்டி கொடுப்பதற்காக பணிகள் துரிதமாக நடை பெற்று வருகின்றன. அதற்காக அறநிலையத்துறையிடம் இடம் கேட்டிருக்கிறோம். இடம் கிடைத்தவுடன் அந்த பணி முடிவுறும். மீதமுள் ளவர்களுக்கு வீடு கட்டி கொடுப்பதற்காக 3 ஐ.ஏ.எஸ்அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு அவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்அவர்களின் பரிந்துரைப்படி பாதிக்கப்பட்ட அனைவருக் கும் வீடுகள் கட்டி கொடுக் கப்படும். இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரி வித்தார்.