கர்நாடக அரசுக்கு தலைக்குமேல் கத்தி நாளை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்

பெங்களூரு, கர்நாடகாவில் நிலவிரும் தற் போதைய குழப்பமான சூழ்நிலை யில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் 9-ந்தேதி நடைபெறும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அவசியம் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் முதல்வர் குமார் சாமி தலைமையில் காங்கிரஸ், மத சார்பற்ற ஜனதாதளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரு கிறது. இந்த கூட்டணி ஆட்சிக்கு நியமன எம்.எல்.ஏ. உட்பட 225 உறுப்பினர்களை கொண்ட சட்ட சபையில் 120 பேரின் ஆதரவு இருந்து வருகிறது. இவர்களில் அமைச்சர் பதவி கிடைக்காமல் 20க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். இதை பயன்படுத்தி குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி யை கவிழ்க்க, 105எம்.எல்.ஏ.க்களை கொண்ட பா.ஜ.க. தீவிரமாக காய் களை நகர்த்துவதாக கூறப்படும் இதற்கிடையே, அமைச்சர் பத வியில் இருந்து நீக்கப்பட்ட காங் கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கி கோளி, ஆனந்த்சிங் எம்.எல்.ஏ. ஆகியோர் தங்கள் பதவியை ராஜி னாமா செய்தனர். அவர்களது ராஜி னாமாவை சபாநாயகர் ரமேஷ்குமார் இன்னும் ஏற்கவில்லை. மேலும், காங்கிரஸ் மற்றும் மத சார்பற்ற ஜனதாதளம் கட்சியை கிறது. சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அதற்கான கடிதங்களை சபாநாயகர் ரமேஷ்குமார் இல்லாத நிலையில், அவரது செயலாளரிடம் கொடுத் தனர். அதன்பின், அந்த எம்.எல். ஏ.க்களில் 11 பேர் கவர்னர் மாளி கைக்கு சென்று கவர்னர் வாஜ்பாய் வாலாவை சந்தித்து பேசினார்கள். பின்னர் அவர்கள் பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் மும்பை சென்றனர். இந்நிலையில், கர்நாடக காங் கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் மும்பையில் உள்ள சோபிடெல் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் தங்களது பதவியை இன்னும் ஓரிரு நாட்களில் ராஜினாமா செய்யலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளதால், குமாரசாமி தலைமையிலான கூட் டணி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட் டுள்ளது. வரும் 12-ம் தேதி கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில் 11 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவ காரம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, கர்நாடகாவில் நிலவும் அரசியல் குழப்பத்தின் பின்னணியில் பாஜக உள்ளது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சித்தராமையா ஆகியோர் குற்றம் சாட்டினர். இந்நிலையில், பெங்களூருவில்) முன்னாள் பிரதமர் தேவே கவு டாவை காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான சிவகுமார் நேற்று சந்தித்தார். அப்போது, கர்நாடக அரசியல் நிகழ்வுகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். அவரு டன் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் உடனிருந்தனர். இதனிடையே, ஆட்சியை தக்க வைக்க, காங்கிரஸ் கடும் முயற்சி எடுத்து வருகிறது. அந்த வகையில், 9ஆம்தேதி (நாளை) நடைபெறும் கூட்டத்தில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் பங் கேற்க வேண்டும் என்று காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் சித்த ராமையா எம்எல்ஏக்களுக்கு சுற் றிக்கை அனுப்பியுள்ளார். கூட்டத்) தில் கலந்துக்கொள்ளாத எம். எல். | ஏக்கள் மீது கடும் நடவடிக்கை ஏக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள் | இதனிடையே, கர்நாடகாவில்) நீடித்து வரும் அரசியல் குழப்பங்களால், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த 11. முதல்வர் குமாரசாமி, தனது பய ன: ணத்தை பாதி யில் ரத்து செய்து விட்டு ) உடனடியாக பெங்களூரு திரும்பி யுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்