"உங்களையெல்லாம் யார் வேலைக்கு எடுத்தது ? கரூர் டி.எஸ்.பியை வறுத்தெடுத்த மாவட்ட நீதிபதி

கரூர் நகர டி.எஸ்.பி கும்மராஜாவை, கரூர் மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர், "நீங்கள் எப்படி டி.எஸ்.பி ஆனீர்கள்?. நீங்களெல்லாம் காவல்துறையில் இருந்தால், மக்களுக்குத்தான் கேடு” என்றெல்லாம் ஒரு மணிநேரம் வறுத்தெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கரூர் தான்தோன்றிமலையில் இயங்கி வருகிறது, அரசு கலைக் கல்லூரி, இந்தக் கல்லூரியில் பொருளியல் துறைக்குத் தலைவராக பணியாற்றி வந்தவர் இளங்கோவன். 52 வயதையுடைய இவர் மாணவி களிடம் தவறாகப் பேசுகிறார். இவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று மூன்று மாதங்களுக்கு முன்பு மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதனால், அவர் கைதுசெய்யப்பட்டார். அப்போதே மாணவர்கள், காவல்துறை இளங்கோவனு க்குச் சாதகமாகச் செயல்படு கிறது” என்று குற்றம்சாட்டினர். செய்யப்பட்ட அவர், சிறையில் அடைக்கப்பட்டார். கரூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில், கரூர் காவல்துறையினர் 90 நாள்களைக் கடந்தும் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், இளங்கோவனுக்கு ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த ஜாமீன் மனுவைப் பார்த்துக் கோபப்பட்ட மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர், வழக்கின் விசாரணை அதிகாரியான கரூர் நகர டி.எஸ்.பி கும்மராஜாவை ஆஜராகச் சொல்லி வறுத்துத்தெடுத்திருக்கிறார். சம்பந்தமாக நீதிமன்றத்தில் நடந்தவற்றை விவரித்த வழக்கறிஞர்கள் சிலர், நீதிமன்றத்துக்கு கும்மராஜா வந்ததும், குற்றவாளியைக் கைது செய்து 90 நாள்கள் ஆகியும், ஏன் அவர்மீது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யவில்லை? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி தொடர்ந்து, குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யவில்லை என்றால், அவருக்கு எளிதாக ஜாமீன் கிடைத்துவிடும் அதற்கு நீங்களே வழிவகுக்கிறீர்களா. உங்களை எல்லாம் யார் போலீஸ் வேலைக்கு எடுத்தது? நீங்களெல்லாம் எப்படி டி.எஸ்.பி ஆனீர்கள்? நீங்கள் குற்றவாளியை தப்பிக்க வைக்கக் காரணமாக இருந்திருக்கிறீர்கள்? உங்களை மாதிரி ஆள்கள் மாவட்ட நீதிபதி காவல்துறையில் இருந்தால் பொதுமக்களுக்குத்தான் கேடு. உங்களுக்கு மேல் உள்ள காவல்துறை அதிகாரி யார்? குற்றவாளி மீது, அதுவும் கல்லூரியில் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் மீது குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்வதில் என்ன கஷ்டம்? இப்படிப்பட்ட வழக்கில் இவ்வளவு அலட்சியமாக 90 நாள்கள் குற்றப்பத்திரிகையை தாக்கல் பண்ணாம, அப்படி என்ன பண்ணிகிட்டு இருந்தீங்க? எனக்குக் காரணம் சொல்லணும். இளங்கோவனுக்கு இன்று ஜாமீன் தரமுடியாது. நீங்க 90 நாள்களும் என்ன பண்ணிகிட்டு இருந்தீங்கன்னு தினவாரியான அபிடவிட்டை கோர்ட்டில் தாக்கல் பண்ணுங்க. திங்கட்கிழமை தாக்கல் பண்ணணும். அன்னைக்கு இந்த மனு மீதான விசாரணையைத் தள்ளி வைக்கிறேன்' என உத்தர விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)