பத்திரிகையாளர் என்பது பொதுவில் இருக்க வேண்டும்

பத்திரிகையாளர்கள்தான் மிகப்பெரிய ஆதரவுகள் கிடைத்து வருகிறது ... ஜனநாயக நாட்டில் பதிவு பெற்ற RNI இருக்கும் பத்திரிகைகள் அனைத்தும் பத்திரிகை துறையை சேர்ந்தவர்கள்..ஆகும்.துன்பத்தில் துடிக்கும்போது துயர் துடைக்கும் தோழனாகவும் நடக்கும்போது உடன் நடக்கும் நண்பனாகவும் தடுமாறும் போது வழிகாட்டும் ஆசிரியராக பணியாற்றுவது இதழில் துறை ஆகும்".புலனாய்வு இதழியல் என்றால் என்ன என்று விளக்கம் அளிப்பதில் புலனாய்வுப் பத்திரிகையாளர்களுக்கும் இத்துறை அறிஞர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. குற்றச்செயல்கள் அல்லது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயம் போன்றவை தொடர்பான தகவல்களைத் தேடித் துழாவித் திரட்டுவது, இதுகுறித்து ஏற்கெனவே நிலவிய தகவல்களில் வெளிச்சம் பாய்ச்சுவது, மூடி மறைக்கப்படும் விவகாரங்களை அம்பலப்படுத்துவது அல்லது மக்களால் அறிய முடியாத தகவல்களைத் தேடிக் கண்டுபிடித்து வெளிப்படுத்துவது என்பதே புலனாய்வு இதழியல் என்பதை நாம் ஒப்புக்கொள்ளலாம். உண்மையான தகவல்களைத் தேடிக் கண்டுபிடிப்பதுதான் இந்தப் பணியின் முக்கிய அடித்தளம். ஆனால், சம்பவங்களை இதழாளர் வாங்கிக் கொள்ளவில்லையென்றால், புலனாய்வு செய்வதில் பலன் ஏதும் இருக்காது. ஊடகவியல் (Journalism) அல்லது இதழியல் என்பது, மக்களிடம் செய்திகள், நிகழ்வுகளை கொண்டு செல்லும் ஊடகங்கள். அவை, செய்தித்தாள்கள், சஞ்சிகைகள், வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் அடங்கும். மேலும், இதழியல் என்பது செய்திகளை அல்லது செய்திக் கட்டுரைகளை சேகரித்தல், எழுதுதல், தொகுத்தல், வெளியிடுதல் என்பவற்றை உள்ளடக்கிய ஒரு பணி ஆகும். முன்னர் இத்து6 ஊடகங்களான செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் முதலியவற்றில் செய்திகளைச் சேகரித்து வெளியிடுவதை மட்டுமே செய்து வந்தது. 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து மின்னணு ஊடகங்களையும் இது தனக்குள் உள்ளடக்கியது. எழுத்தாளர் அல்லது ஊடகவியலாளர் மக்களோடு தொடர்புள்ள நிகழ்வுகளையும், எண்ணங்களையும், பிரச்சினைகளையும் விளக்குவதற்கு உண்மையாக தகவல்களை வெளியிட வேண்டும் என்பதே ஊடக நெறியாக இருக்க வேண்டும், என எதிர்பார்க்கப்படுகிறது. ஊடகவியலாளர் தகவல்களைத் திரட்டி வெளியிடுவதனால் உள்ளூர், மாநில, தேசிய என அனைத்து தரப்பு செய்திகளையும் உடனுக்குடன் மக்கள் அறிந்துக் கொள்ள முடிகிறது. ஊடகவியல்; அரசு, பொதுத்துறை அலுவலர்கள், நிறுவன நிறைவேற்று அதிகாரிகள், தொண்டு நிறுவனங்கள், ஊடகவியல் நிறுவனங்கள், சமூக அதிகாரங்களைக் கொண்டிருப்போர் போன்றோரின் நடவடிக்கைகள் பற்றி அறிவிப்பதுடன்; நடப்பு நிகழ்வுகள் குறித்த தமது கருத்துக்களையும் வெளியிடுவதுண்டு.தற்காலத்தில் நிருபர்கள் தமது தகவல்களையோ அவை தொடர்பான கட்டுரைகளையோ மின்னணுத் தகவல் தொடர்புகள் மூலம் தொலை தூரங்களில் இருந்தே அனுப்புகிறார்கள். புதிய செய்திகள் உருவாகும்போது நிகழிடத்துக்குச் செல்லும் நிருபர்கள் தகவல்களை சேகரித்து உடனுக்குடன் ஊடக அலுவலகத்துக்கு அனுப்புவர், இவற்றை அடிப்படையாகக் கொண்டு செய்திகள் எழுதப்பட்டு வெளியிடப்படுகின்றன.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)