எதிர்ப்புகளை மீறி முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது. முஸ்லிம் பெண்களை அவர்களுடைய கணவன்மார்கள், 'தலாக்' என்று உடனுக்குடன் 3 தடவை கூறி விவாகரத்து செய்வதை தடை செய்யும் நோக்கத்தில், முத்தலாக் தடை சட்ட மசோதா, பிரதமர் நரேந்திர மோடியின் முந்தைய ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்ட மசோதா என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவின் சில அம்சங்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.குற்றச்சாட்டுக்கு உள்ளான கணவன்மார்களுக்கு ஜாமீன் கிடையாது என்ற ஷரத்து நீக்கப்பட்டது. இதையடுத்து, மக்களவையில் மசோதா நிறைவேறியது. மாநிலங்களவையில், பா.ஜனதா கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால், மசோதா நிறைவேறாமல் நிலுவையில் இருந்தது. இதனால் முத்தலாக் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே மக்களவையின் பதவிக்காலம் முடிவடைந்து, மக்களவை கலைக்கப்பட்டதால், முத்தலாக் தடை மசோதா காலாவதி ஆகிவிட்டது.அதன்பின்னர் மீண்டும் பிரதமர் மோடி அரசு பொறுப்பேற்று, மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மக்களவையில் இன்று மீண்டும் முத்தலாக் தடை சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “முஸ்லிம் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். இது, பெண்களுக்கான நீதி மற்றும் அதிகாரமளித்தல் சம்பந்தப்பட்ட விஷயம். சட்டங்களை உருவாக்குவதற்காக மக்கள் நம்மை தேர்ந்து எடுத்துள்ளனர். சட்டங்களை உருவாக்குவது நமது பணி. முத்தலாக் நடைமுறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சட்டம் நீதி வழங்கும்” என்றார். முத்தலாக் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் நடுத்தெருவில் நிற்க வேண்டுமா?, உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தப்பின் நேற்று வரை 345 முத்தலாக் வழக்குகள் பதிவாகியுள்ளது என்றும் கூறினார். நாங்கள் பிரதமர் நரேந்திர மோடி அரசின் அமைச்சர்கள், ராஜீவ் காந்தி அரசின் அமைச்சர்கள் அல்ல என மத்திய சட்டத்துறை ரவிசங்கர் பிரசாத் மக்களவையில் தெரிவித்தார்.இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். அதிமுக ஆதரவு தெரிவித்தது. தொடர்ந்து, முத்தலாக் தடை மசோதா மக்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முடிவில் 303 உறுப்பினர்கள் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. தொடச்சியாக இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும், மாநிலங்களவையிலும், மத்திய பாஜக அரசுக்கு பொதுமான உறுப்பினர்கள் உள்ளதால் அங்கும் மசோதா நிறைவேறி விரைவில் சட்டமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருமாவளவன் எம்.பி:முத்தலாக் தடை மசோதாவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. மக்களவையில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முத்தலாக் தடைச்சட்டம் ஒரு சார்பானது, அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று மக்களவையில் திருமாவளவன் கூறினார். மேலும் முஸ்லிம்களின் தனிநபர் சட்ட விதிகளில் முத்தலாக் தடைச்சட்டம் தலையிடுவதாக திருமாவளவன் புகார் தெரிவித்துள்ளார். திமுக எம்.பி. கனிமொழி:மகளிர் பாதுகாப்புக்காகவே முத்தலாக் தடை சட்டம் என்று கூறும் மத்திய அரசு மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை ஏன் நிறைவேற்றவில்லை என்று மக்களவையில் முத்தலாக் தடை மசோதா மீதான விவாதத்தின் போது திமுக உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் 2.37 மில்லியன் பெண்களில் 0.28 முஸ்லீம் பெண்கள் உள்ள நிலையில், பெரும்பாலான பெண்களை அரசு பாதுகாப்பாக வைத்துள்ளதாக கருகிறதா?. அப்படியென்றால் இந்த மசோதா ஒரு சமூகம், ஒரு மதத்தை மட்டும் குறிவைப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார். முத்தலாக் தடை சட்டம் குறுகிய பார்வை கொண்டது என்று கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். இதனால் நாட்டில் சிறுபான்மையில் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக உணர்வதை திமுக ஒருபோதும் | அனுமதிக்காது என்றும் கனிமொழி மக்களவையில் தெரிவித்தார். அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் ஆதரவு:முத்தலாக் தடை மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்தது. முத்தலாக் தடை மசோதா மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர், ரவீந்திரநாத் குமார், முத்தலாக் தடை மசோதா சமூக ரீதியில் மகளிருக்கு அதிக வலிமையை தரும் என்றார். பழங்காலத்தில் இருந்தே மகளிருக்கு சம உரிமை இல்லாத நிலையில், இந்த மசோதா அதனை பெற்றுத்தர வழி வகுக்கும் என்று அவர் குறிப்பிட்டார். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 14, 15 வது பிரிவுகள் பாலின, இன, மொழி, சாதி ரீதியில் யாருக்கும் எந்த பாகுபாடும் காட்டக்கூடாது என்பதை வலியுறுத்துவதை அவர் சுட்டிக்காட்டினார்.முத்தலாக் தடை மசோதா, அந்த சட்டப்பிரிவுகளுக்கு மேலும் வலிமை சேர்க்கும் ல் கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பிரச்சனைக்குள் இந்த மசோதாவை உட்படுத்தக் கூடாது என்ற அவர், இது மகளிரின் உரிமையோடு தொடர்புடையது என்றார். மகளிருக்கு சமநிலை கிடைக்க உதவும் என்பதால் இந்த மசோதாவை அதிமுக ஆதரிப்பதாக ரவீந்திரநாத் குமார் தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு:மக்களவையில் முத்தலாக் தடை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.பி மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள், திமுக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து, முத்தலாக் மசோதா ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தும் என்று ராஜீவ் ரஞ்சன் எம்.பி. தெரிவித்துள்ளார். முத்தலாக் மசோதாவுக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவு அளிக்காது என தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ், திமுக கட்சியினரும் வெளிநடப்பு செய்தனர். முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற எதிர்ப்பும் ஆதரவும்:;


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)