சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தேவையான அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது - முதலமைச்சர்

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தேவையான அனைத்தும் அரசின் சார்பாக வழங்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். பேரவையில் இதுகுறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, பொன்மாணிக்கவேல் பொறுப்பேற்றதில் இருந்து 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 13 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார். அதில் 7 பேர் தண்டனை பெற்றுள்ளனர் என்றும் 4 பேர் விடுதலை ஆகியுள்ளனர் என்றும் அவர் கூறினார். மேலும் பொன் மாணிக்கவேல் பதவிக்காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 4 வழக்குகள் தான் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். மேலும் சிலைக்கடத்தல் சிறப்பு அதிகாரியாக உள்ள பொன் மாணிக்கவேலுக்கு 204 காவல் துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 31 நான்கு சக்கர வாகனம், உட்பட அனைத்து செலவுகளுக்கும் சேர்த்து சுமார் 22 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், பொன்மாணிக்கவேலுக்கு தேவையான அனைத்து தமிழக அரசின் சார்பாக வழங்கப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் கூறினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)