பத்திரிகையாளர் ஓய்வூதிய பரிசீலனைக் குழு 2019 - 2020 - புதிய உறுப்பினர்கள் நியமித்து - ஆணை வெளியிடு

பத்திரிகையாளர் ஓய்வூதிய பரிசீலனைக் குழு 2019 - 2020 - புதிய உறுப்பினர்கள் நியமித்து - ஆணை வெளியிடப்படுகிறதுதமிழக அரசு, ஓய்வு பெற்று நலிவுற்ற நிலையில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் அளித்து வருகிறது. இந்த நிதி உதவியினை பெறுவதற்கான விதிமுறைகளை பூர்த்தி செய்யும் மனுதாரர்களின் மனு, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியராலும் மற்றும் பத்திரிகையாளர் ஓய்வூதிய பரிசீலனைக் குழுவாலும் பரிந்துரை செய்யப்பட வேண்டும். பத்திரிகையாளர் ஓய்வூதிய பரிசீலனைக் குழு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை அரசால் அமைக்கப்படுகிறது. அமைக்கப்பட்ட குழுவின் ஆயுட்காலம் முடிவுற்ற நிலையில், கவனமான பரிசீலனைக்குப் பின்னர், ஒய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு 2019-2022-ஆம் ஆண்டுகளுக்கான மாத ஓய்வூதியம் வழங்க கீழ்க்காணும் உறுப்பினர்கள் அடங்கிய பத்திரிகையாளர் ஓய்வூதியப் பரிசீலனைக் குழுவை அமைத்து அரசு ஆணையிடுகிறது. தலைவர்-இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை. உறுப்பினர்- (அரசு பிரதிநிதி)அரசு துணைச் செயலாளர், நிதி(ஓய்வூதியங்கள்)த்துறை. உறுப்பினர்- செயலர் கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு), செய்தி மக்கள் தொடர்புத்துறை உறுப்பினர்-இணை துணை ஆணையர், தொழிலாளர் நல ஆணையரகம், சென்னை. உறுப்பினர்-இணை துணை ஆணையர், வருவாய் (நிர்வாக ஆணையரகம், சென்னை, உறுப்பினர்கள்-சென்னை நிருபர்கள் சங்கம்  1) திரு. ஏ.பி. மோகன், மக்கள்குரல் 2) திரு.எம்.சுப்பிரமணியன், ஆசிரியர், உறுப்பினர்கள்-சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம் திரு. எ.பெருமாள் (பாரதி தமிழன்), சிறப்புச் செய்தியாளர், தி இந்து தமிழ். திரு.எஸ்.அருண்மொழி, நிருபர், குமரி முரசு,அரசு நியமன உறுப்பினர்-திரு.டி.இ.ஆர்.சுகுமார்அசோசியேட் எடிட்டர், தினத்தந்தி, திரு. மருது அழகுராஜ் எடிட்டர், நமது அம்மா  அமைக்கப்பட்ட குழு உறுப்பினர்களின் பதவி காலம் அரசாணை வெளியிடப்படும் நாளிலிருந்து ஆண்டுகள் (2019-2022) வரை நீடிக்கும்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)