'ஹெல்மெட் அணியாமல் சிக்கியவர்களுக்கு இனிப்பு கொடுத்து விழிப்புணர்வு, உறுதிமொழி: போக்குவரத்து போலீஸ் நூதன ஏற்பாடு
சென்னை ,'ஹெல்மெட் அணியாமல் சென்ற, இருசக்கரவாகன ஓட்டிகளுக்கு, சென்னை போக்குவரத்து போலீசார், இனிப்பு கொடுத்து, ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து, நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஹெல்மெட் விவகாரத்தில், அலட்சியமாக செயல்படும் போலீசார் மீது, நடவடிக்கை எடுக்க, தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கியது. இதனால் ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளை மறித்து, அபராதம் விதிக்கும் பணியில், போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு, இன்ப அதிர்ச்சியையும், அதே நேரத்தில், யோசிக்கவும் வைக்கும் வகையில், சென்னை, கோடம்பாக்கம் போக்குவரத்து போலீசார் நூதன முறையில், ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வுபிரசாரம் செய்தனர். கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களை போக்குவரத்து ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமை அணிந்து யிலான போலீசார் மடக்கிப் பிடித்தனர். 'அபராதம் தான் விதிக்க போகின்றனர்' என, அதிர்ந்த வாகன ஓட்டிகளுக்கு, போலீசார், இனிப்பு கொடுத்தனர். நாற்காலி போட்டு, அமர வைத்தனர். பின் போக்குவரத்து விதிமீறல்கள் குறித்தும், வாகனம் ஓட்டுபவர்கள், பின்னால் அமர்ந்திருப்பவர், ஹெல்மெட் அணிய வேண்டிய அவசியம் குறித்தும் இன்ஸ்பெக்டர் வலியுறுத்தி பேசினார். இனி ஹெல்மெட் அணியாமல், இருசக்கர வாகனத்தை இயக்க மாட்டோம்' என, வாகன ஓட்டிகளிடம், உறுதிமொழி பெற்றார்.