ஆன்லைன் மூலம் செலுத்திய பணம் திரும்ப வரவில்லை என,கூகுளில் உபர் ஈட்ஸ் செயலியின் சேவை மைய எண்ணை தேடியுள்ளார்.

சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்தவர் ப்ரியா அகர்வால் என்ற கல்லூரி மாணவி தனது நண்பர்களுடன் வடபழனிக்கு வந்துள்ளார். தனது செல்போனில் இருந்து உபேர் ஈட்ஸ் செயலி மூலம் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். அதற்கான 76 ரூபாய் மாணவி ப்ரியாவின் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட, உபேர் ஈட்ஸ்லிருந்து ஆர்டர் ரத்து செய்யப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. ஆனால், கூகுளில் பதிவாகியிருந்தது மோசடி நபர்களின் போலியான சேவை எண் என்பதை அறியாமல் அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார். எதிர் முனையில் பேசிய நபர் மாணவியின் வங்கி விவரங்களை வாங்கியுள்ளார். பின்னர் 76 ரூபாய் சிறு தொகையாக இருப்பதால் ஆன்லைன் பரிவர்த்தனையில் திருப்பி செலுத்த முடியாது என கூறி ஐயாயிரம் ரூபாய் அனுப்பினால் மொத்தமாக சேர்த்து ஐயாயிரத்து 76 செலுத்தப்படும் என கூறியுள்ளனர். இதனை நம்பிய மாணவி ப்ரியா கூகுள் பே செயலி மூலம் ஐயாயிரம் ரூபாயை சேவை மைய நபர் சொல்லும் எண்ணுக்கு அனுப்பியுள்ளார். இதன் மூலம் மாணவியின் வங்கி விவரங்களை தெரிந்து கொண்ட மோசடி நபர், பணம் வந்து சேரவில்லை என கூறிய மாணவியிடம் தற்போது ஓடிபி எண் வரும், அதை தெரிவித்தால் பணம் கணக்கில் வந்து சேரும் என கூற மாணவியும் ஓடிபி எண்ணை தெரிவித்துள்ளார். ஆனால் தனது கணக்கில் பணம் வரவில்லை என மாணவி கூற அப்படியானால் மீண்டும் ஓடிபி எண்ணை அனுப்புகிறேன் என, இதே போல 8 முறை ஓடிபி எண்ணை அனுப்பியுள்ளார். ஒவ்வொரு முறையும் ஐயாயிரம் வீதம் 40 ஆயிரம் ரூபாயை அந்த மோசடி நபர் சுருட்டிய பிறகு தொடர்பை துண்டித்துவிட்டு தப்பியுள்ளார். மோசடி நபர் தொடர்பு கொண்ட செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதே போன்று கூகுளில் இருக்கும் பல்வேறு செயலிகள், நிறுவனங்களின் போலி சேவை எண்ணைகளை தொடர்பு கொண்டு பணத்தை இழந்த பலரும் சென்னை வங்கி மோசடி தடுப்பு பிரிவில் புகார் அளித்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு