யானை தாக்கி உயிரிழந்த செல்வராஜ் குடும்பத்திற்கு முதல் கட்டமாக, 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது

வால்பாறை:வால்பாறை, குரங்குமுடி எஸ்டேட் தொழிலாளி பரிமளாகாந்தியின் கணவர் செல்வராஜ், 45. இவர் அருகில் உள்ள சிவா காப்பி எஸ்டேட்டில் இரவு காவலராக பணியாற்றினார்.கடந்த, 30ம் தேதி மாலை, பணிக்கு சென்றவர் யானை தாக்கி இறந்தார். இறந்தவரின் உடல் வால்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வால்பாறை வனச்சரக அலுவலர் சக்திகணேஷ், மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் நடராஜ், வால்பாறை டி.எஸ்.பி., விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர், இறந்தவரின் குடும்பத்திற்கு நஷ்டஈடாக முதல் கட்டமாக, 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.வனத்துறையினர் கூறுகையில், 'யானைகள் நடமாடம் குறித்து இரவு, பகலாக கண்காணித்து வருகிறோம். யானைகள் நடமாடும் பகுதியில் தொழிலாளர்கள் தேயிலை பறிக்க எஸ்டேட் நிர்வாகங்கள் அனுமதிக்க கூடாது.குறுக்கு வழித்தடத்தில் தொழிலாளர்கள் நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும். யானை தாக்கி உயிரிழந்த செல்வராஜ் குடும்பத்திற்கு முதல் கட்டமாக, 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பிற சான்றிதழ்கள் முறைப்படி அலுவகத்தில் சமர்ப்பித்த பின், மீதமுள்ள, 3.5 லட்சம் ரூபாய் வழங்கப்படும்,' என்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்