ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழகத்தில் அனுமதி கிடையாது

சட்டப்பேரவையில் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவிப்பு தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அம்மாவின் அரசு ஒருபோதும் அனுமதி வழங்காது, வழங்கவும் மாட்டோம் என்று சட்டப்பேரவையில் தமிழக அரசின் சார்பில் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது. சென்னை, ஜூலை 4- சட்டப்பேரவையில் நேற்று தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அப் போது அவர் பேசும்போது, காவேரி டெல்டா படுகையில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு உரிமம் வழங்கியுள்ளது என்று குறிப்பிட்டார். தி.மு.க.வின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மா னத்துக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் புள்ளி விபரங்களுடனும், ஆதாரங்களுடனும் விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:- காவேரி டெல்டா பகுதிக ளில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்று மரபு சாரா கனிமங்களை எடுத் துக் கொள்ள மத்திய அரசு உரிமம் வழங்கியுள்ளது. இதற்காக மத்திய அரசு புதிய விதிமுறைகளை உரு வாக்கி புதிய கொள்கையை அறிவித்திருக்கிறது. அந்த உரிமத்தின்படி ஹைட்ரோ கார்பன், எண்ணெய் வளம், இதற்காக மத்திய அரசு கனிமவளம் போன்றவற்றை உரிமை பெறும் நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஒரே உரிமத்தில் ஆய்வு மற்றும் உற்பத்திக்கு அனுமதி அளிக் கிறது. இது தொடர்பாக இணையத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப் பம் செய்பவர்களுக்கு திறந்த வெளி உரிமம் பொது ஏலம் முறையில் வழங்கப்படுகிறது. 55 தொகுப்புகளுக்கு ஏலம் மூலம் ஓ.என்.சி.சி. வேதாந்தா நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எந்த நிலை யிலும் எப்போதும் தமிழக அரசு அனுமதி வழங்காது. கடற்பரப்பிலும், நிலப்பரப் பிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுவரை தமிழகத்தில் எந்தவொரு நிறுவனத்திற்கும் ஹைட்ரோ கார்பன் தொடர்பாக ஆய்வு செய்யவோ, எடுக்கவோ அனு மதி வழங்கப்படவில்லை . அரசுக்கு வந்த விண்ணப் பங்கள் மீது எந்த அனுமதி யும் இன்றைய தேதி வரை வழங்கப்படவில்லை. ஆனால் அரசு அனுமதி வழங்கிய தாக தவறான தகவல்களை பரப்புகிறார்கள். தமிழகத் தில் எந்த சூழ்நிலையிலும் எந்த நிலையிலும் எப்போ தும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்காது. ஆய்வு செய்யக்கூட நாங்கள் அனு மதி வழங்கப்போவதில்லை . இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார். அப்போது டி.ஆர்.பி.ராஜா குறுக்கிட்டு மறைந்த முதல் மைச்சர் புரட்சித்தலைவி அம்மா ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்று அமைத்திருந்தார். அந்த குழுவின் அறிக்கை சமர்ப்பிக்காதது ஏன்? என்று கேட்டார். அதற்கு அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கமாக பதிலளித்தார். 2011-ம் ஆண்டு அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு அறிக்கை பற்றி உறுப் பினர் கேட்டிருக்கிறார். அதுபற்றி பேச வேண்டாம் என நினைத்தேன். ஆனால் முழு விபரத்தையும் தெரி விக்க வேண்டிய நிலையை எனக்கு ஏற்படுத்தி விட்டார்தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தமிழக அரசு அனுமதிக்காத நிலையில் தி.மு.க. போராட் டம் நடத்தி தமிழகத்தை போராட்ட களமாக மாற்ற முயற்சி செய்கிறது. 2010-ல் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒரு நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதுஅப்போது மத்தியில் இருந்த உங்களது கூட்டணி ஆட்சியில் 961 சதுர அடி பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் எடுக்கலாம் என்று அனுமதி வழங்கப்பட்டதுஇதை எதிர்த்து தான் பொது மக்கள் போராட்டம் நடத்தி னார்கள். அதைத்தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதுமக்கள் உணர்வுகளை புரிந்து கொண்ட புரட்சித்த லைவி அம்மா அவர்கள் ஹைட்ரோ கார்பன் திட் டத்தால் ஏற்படும் பாதிப் புகள் குறித்து ஆய்வு செய்ய உயர்மட்ட குழு ஒன்றை அமைத்தார். அந்த குழுவின் அறிக்கைபடி ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனும் தியை ரத்து செய்து புரட் சித்தலைவி அம்மா அவர்கள் அரசாணை பிறப்பித்தார். (புரட்சித்தலைவி அம்மா வெளியிட்ட அரசாணை விபரத்தை அமைச்சர் படித்து காட்டினார்). அந்த அரசா ணைப்படி ஒட்டுமொத்த காவேரி டெல்டா பகுதிக ளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தடை விதிக்கப் பட்டது. எதிர்காலத்திலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க தடை விதித்து அந்த உயர்மட்ட குழுவின் அறிக்கையை ஏற்று அரசாணை பிறப்பிக்கப்பட் டது. அம்மா அவர்களின் கொள்கை தான் இந்த அர சின் கொள்கையும் ஆகும். எனவே காவேரி டெல்டா பகுதிகளில் எந்த நிலையிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அரசு அனுமதி வழங்காது. அது தொடர்பாக ஆய்வு நடத்தவோ, உற்பத்தி செய் யவோ அம்மாவின் வழியில் செயல்படும் முதலமைச்சர் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார். அப்போது எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குறுக்கிட்டு, நாங்கள் ஆய்வு நடத்தத்தான் அனுமதி வழங்கினோம். ஹைட்ரோ கார்பன் எடுக்க உரிமம் வழங்கவில்லை என்று கூறினார். இதற்கு அமைச்சர் .வி.சண்முகம் பதிலளிக்கை யில், நீங்கள் எத்தனை முறை சொன்னாலும் உண்மையை மறைக்க முடியாது. மத்திய அரசு 2010-ல் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கியது. 2011-ம் ஆண்டு இத்திட்டத்தை தொடங்க நீங்கள் (தி.மு.க.) அனுமதி கொடுத்தீர்கள். உற்பத்தி செய்யும் அனுமதியும் வழங்கப் பட்டது. கிரேட் ஈஸ்ட்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் என்ற நிறுவனத்துடன் அப்போது துணை முதல்வராக இருந்த நீங்கள் (ஸ்டாலின்) முன் னிலையில் அந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. எனவே அந்த உண்மையை மறைக்க முடியாது என்றார். ஸ்டாலின்: ஹைட்ரோ கார்பன் எடுக்க அந்த நிறுவ னத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டும் தான் செய்யப்பட்டது. ஆய்வு செய்ய மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. உங்கள் ஆட்சியில் அரசாணை பிறப் பிக்கப்பட்ட பின்னர் அது காலாவதி ஆகி விட்டது. அமைச்சர் சி.வி.சண்மு கம்: நானும் ஆய்வு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது என்று தான் கூறினேன். ஆனால் எங்களது நிலைப்பாடு ஆய்வே செய் யக்கூடாது என்பது தான். துரைமுருகன்: பொதுவாக ஒருதிட்டம் வரும்போது ஆய்வு செய்ய அனுமதி அளிப்பது வேறு, செயல்படுத்த அனுமதி அளிப்பது வேறு, சாதகமாக இருந்தால் ஆய்வு செய்ய வும், பாதகமாக இருந்தால் அனுமதி இல்லை என்று தெரிவிப்பதும் நடைமுறை. அமைச்சர் சி.வி.சண்மு கம்: இந்த விஷயத்தை அர சியலாக்க விரும்பவில்லை. ஹைட்ரோ கார்பன் திட்டம் எந்த காலத்திலும் வரக்கூடாது என்பது தான் எங்கள் அரசின் நிலைப்பாடு. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது நீதிபதி கேள்வி எழுப்பினார். அரசே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்க்கும்போது நீங்கள் போராட்டம் நடத்துவது ஏன் என்று கேள்வி எழுப்பி னார். ஆனால் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு நாங்கள் அனுமதி அளித்தது போன்று எங்களுக்கு எதிராக மக்களை தூண்டி விடுகிறார்கள். ஸ்டாலின்: நீங்கள் என்ன தான் சொன்னாலும் மத்திய அரசு அந்த திட்டத்தை செயல்படுத்த முயலும். அமைச்சர் சி.வி.சண் முகம்: மத்திய அரசு அனு மதி அளித்தாலும் அதை எதிர்க்க மாநில அரசுக்கு உரிமை உண்டு. கடற்கரை மேலாண்மை அமைப்பு நமது கட்டுப்பாட்டில் இருக் கிறது. எனவே நிலத்திலும் சரி, கடற்பகுதியிலும் சரி, நம்மிடம் அனுமதி பெற்றுத் தான் ஹைட்ரோ கார்பன் எடுக்க முடியும். நிலப்பரப்பில் ஹைட்ரோ கார்பன் எடுப் பதை தடை செய்ய மாநில அரசின் அரசாணை உள்ளது. ஒருபோதும் ஹைட்ரோ கார் பன் திட்டத்திற்கு நாங்கள் இசைவு அளிக்க மாட்டோம். அம்மாவின் வழியில் நின்று இதனை செயல்படுத்துவோம். இவ்வாறு அமைச்சர் விளக்கம் அளித்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)