மத்திய அரசுக்கு எதிராகச் சட்டசபையில் அ.தி.மு.க-வை வைத்து ஆட்டம்காட்ட ஆரம்பித்துள்ளது, தி.மு.க.

அ.தி.மு.க ஆட்சி மத்திய பி.ஜே.பி-யின் அடிமை ஆட்சியாகவே இருக்கிறது“ என்று எதிர்க்கட்சிகள் விமர்ச்சித்துவரும் நிலையில், பிரதமர் மோடி அரசு கொண்டுவந்த பல அதிரடி திட்டங்களைத் தமிழக அரசு ஏற்கிறதா, இல்லையா என்று கேள்விகளையும் கவனஈர்ப்பு தீர்மானங்களையும் கொண்டுவந்து நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக மோடியின் தலைமையிலான பி.ஜே.பி அரசு நாடாளுமன்றத்தில். ``முற்பட்ட சமூகத்தினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு” சட்டத்தை அவசரமாகக் கொண்டுவந்தது. இந்தச் சட்டமசோதாவை, நாடாளுமன்றத்தில் தி.மு.க உள்ளிட்ட ஒருசில கட்சிகளின் எதிர்ப்புடன் உடனடியாக நிறைவேற்றியது, மத்திய அரசு. இந்த இட ஒதுக்கீட்டை மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்குக் கடிதம் கொடுத்துள்ளது. குறிப்பாக நீட் தேர்வு முடிந்த பிறகு மருத்துவத் துறையில் மாணவர் சேர்க்கையின்போது, இந்த இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தினால் மருத்துவப் படிப்புக்கான காலி இடங்களை 25 சதவிகிதம் அதிகரித்துக்கொள்ளலாம் என்று பி.ஜே.பி மாநில அரசுகளுக்குத் தூண்டில் போட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இதுவரை தமிழக அரசு எந்த முடிவும் எடுக்காத நிலையில், இன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் இதுகுறித்த கவனஈர்ப்பு தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தார். அதில் அவர், ``ஏற்கெனவே மத்திய அரசு கொண்டுவந்த நீட் தேர்வில், தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றி அனுப்பினோம். அதுவே, இன்னும் அலமாரியில் தூங்கிக்கொண்டிருக்கிறது. இப்போது முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் இன்னும் பாதிக்கப்படுவார்கள். இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால் 25 சதவிகித இடங்கள் கூடுதலாக ஒதுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 25 சதவிகிதம் என்ற கவர்ச்சி வலையில் இந்த அரசு விழுந்துவிடக் கூடாது. சமூகநீதியைக் காத்த வீராங்கனை என்ற பட்டம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையாருக்கு உண்டு. அவர் வழியில் ஆட்சி நடத்துவதாகச் சொல்லும் நீங்கள் இந்த இடஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ளக் கூடாது. தமிழ்நாடு, சமூகநீதியின் தொட்டில். ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள 69 சதவிகித இடஒதுக்கீட்டை இந்த அரசு ஆடாமல் அசையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்தப் பிரச்னை குறித்து உடனடியாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பேசினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)