நள்ளிரவில் பிறந்த நாள் கொண்டாடிய உதவி ஆய்வாளர்: விசாரணை நடத்த வேலூர் எஸ்பி உத்தரவு
வேலூரில் ஆள் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர் களுடன் உதவி ஆய்வாளர் ஒருவர் தனது பிறந்த நாள் விழாவை நள்ளிரவில் கொண்டாடியது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். குடியாத்தம் கலால் பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் செல்வராஜ். இவர் வேலூர் தெற்கு காவல் நிலையத் தில் சட்டம் ஒழுங்குப் பிரிவில் ஏற்கெனவே பணியாற்றி உள்ளார். வேலூரில் உள்ள காவலர் குடியிருப்பில் தங்கியுள்ளார். இவர் தனது பிறந்த நாளை மே 3ம் தேதி நள்ளிரவு வேலூர் கஸ்பா ஆயுதப்படை வளாகத்துக்கு வளாகத்துக்குச் செல்லும் சாலையில் கேக் வெட்டி நண்பர்களுடன் கொண்டாடி 140 யுள்ளார். ° அவருடன் சில காவலர்களும், சங்கிலி பறிப்பு, ஆள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய கும்பலைச் சேர்ந்த சிலரும் பங்கேற்றிருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இது தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, ''வேலூர் தொரப்பாடியைச் சேர்ந்த கருப்பு ஜெகதீஷ், ஸ்கெட்ச் பரத், தமீம் ஆகியோர் காகிதபட்டரையில் நிதி நிறுவன உரிமையாளர் நந்தகுமார் (24) என்பவரை கடத்திய வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள். மே 7ம் தேதி நடந்த இந்த கடத்தல் சம்பவத்துக்கு முன்பாக மே 3ம் தேதி நள்ளிரவு நடந்த உதவி ஆய்வாளர் செல்வராஜியின் பிறந்த நாள் தாக்கல் ல் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அன்னைக்கு இந்த குடிநீர் திட்டங்களுக்கு இப்போதுதான் விழாவில் இவர்கள் மூன்று பேரும் பங்கேற்றுள்ளனர். ஸ்கெட்ச் பரத் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றும் காவலர் ஒருவருடன் நெருங்கிய நண்பராக இருந்துள்ளார். அவர் மூலம் சில காவல் அதிகாரிகளிடம் நெருங்கிப் பழகியதில் உதவி ஆய்வாளர் செல்வராஜியும் ஒருவர். கருப்பு ஜெகதீஷ், ஏற்கனவே சங்கிலி பறிப்பு வழக்குகளில் கைதானவர். சென்னையில் தங்கியிருந்த அவரை வேலூருக்கு வரவழைத்தவர் ஸ்கெட்ச் பரத். உதவி ஆய்வாளர் செல்வராஜியின் பிறந்த நாளுக்குப் பிறகுதான் நந்தகுமாரை கடத்தும் திட்டத்தை இவர்கள் தீட்டியுள்ளனர். கடத்தல் திட்டம் தோல்வியில் முடிந்த நிலையில் அனைவரும் கைது செய்யப்பட்டனர். தற்போது உதவி ஆய்வாளர் செல்வராஜியின் பிறந்த நாள் விழாவில் இவர்கள் பங்கேற்ற புகைப்படங்கள் வெளி யாகியுள்ளதால் இவர்களுக்கும் செல்வராஜிக்கும் உள்ள தொடர்புகுறித்து விசாரிக்க வேண்டியுள்ள து'' என்று தெரிவித்தனர். இதுகுறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் பிரவேஷ்குமாரிடம் கேட்டதற்கு, “அந்தப் புகைப்படம் எடுக்கப் பட்டது குறித்தும் உடன் இருந்தவர்களுடன் உதவி ஆய்வாளர் செல்வராஜிக்கு இருக்கும் தொடர்பு குறித்தும் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். அறிக்கையின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.