டி.ஜி.பி., அறிக்கை தர உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: தமிழ்நாடு காவல் துறை சீர்திருத்த சட்டத்தை அமல்படுத்த மேற்கொண்ட நடவடிக்கை குறித்து, டி.ஜி.பி., அறிக்கை தாக்கல் செய்ய, உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.கரூர், வெங்கமேடு, வழக்கறிஞர் ராஜேந்திரன் தாக்கல் செய்த, பொதுநல மனு:கரூர், எஸ்.பி.,யாக, மே, 11ல், விக்ரமன் நியமிக்கப்பட்டார். குறுகிய காலத்தில், சென்னை கணினி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். கந்து வட்டி, மணல் திருட்டு, சட்டவிரோத புகையிலை விற்பனையை தடுத்தார். சில அரசியல்வாதிகளின் தலையீட்டால், விக்ரமன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.