பத்திரிகையாளர் நல வாரியம் விரைவில் அமைக்கப்படும்

பத்திரிக்கையாளர் நல வாரியம் விரைவில் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தெரிவித்தார். தமிழக சட்டபேரவையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை மானிய கோரிக்கைமீதான விவாதத்தில் பெரம்பலூர்(தனி) தொகுதிகழக உறுப்பினர் ரா.தமிழ்ச்செல்வன், பத்திரிக்கையாளர்களுக்கு நலவாரியம் அமைக்கவேண்டும் என்று பேசினார். அதற்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில் அளித்து கூறியதாவது: ஊடகத் துறையினர் ஜனநாயகத்தின் நான்காம் தூணாகவிளங்குகிறார்கள். எங்கள் அரசு ஊடகத்துறையின் நலனை என்றுமே கண்ணியத்தோடு காத்துவருகிறது. பத்திரிகையாளர் நலனில் என்றுமே அக்கறை கொண்ட அம்மாவின் அரசு, பல்வேறுசலுகைகளை பத்திரிகையாளர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது. பத்திரிகையாளர் ஓய்வூதியம், பத்திரிகையாளர் குடும்ப ஓய்வூதியம், பணிக்காலத்தில் இயற்கை எய்தும் பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு குடும்ப உதவி நிதியுடன் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவச்சிகிச்சைக்காக ரூ.1லட்சம் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு சலுகைக் கட்டணத்தில் வீட்டுமனை, அரசு வாடகை குடியிருப்பு ஒதுக்கீடு போன்ற சலுவீகைள் வழங்கப்பட்டு வருகிறது. பத்திரிகையாளர்கள் நலனில் அக்கறை கொண்ட அம்மாவின் அரசு, அவர்களுக்கு பல்வேறு சலுகைகளை தொடர்ந்து வழங்கி வருகின்றது. இந்நிலையில் சட்டமன்றஉறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர், பத்திரிகையாளர்களுக்கு நலவாரியம் அமைக்கவேண்டும் என்ற வேண்டுகோளை வைத்துள்ளார்கள். பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம் அமைப்பது தொடர்பாக, சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிக்ககீழ்க்கண்டவாறு குழு அமைக்கப்படும். 1. முதன்மைச் செயலாளர், நிதித்துறை - தலைவர் 2. செயலாளர், தமிழ் வளர்ச்சி (ம) செய்தித்துறை - செயலாளர் 3. இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை - உறுப்பினர் 4. ஆணையர், தொழிலாளர் நலத்துறை - உறுப்பினர் இக்குழு, பத்திரிகையாளர் நல வாரியம் அமைப்பது குறித்து, அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து, அறிக்கைபெறப்படும். அந்த அறிக்கையின் அடிப்படையில் பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்பதை இந்த மாமன்றத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!