தமிழகம், புதுவையில் கடும் எதிர்ப்பு கவர்னர் கிரண்பேடியை மாற்ற முடிவு

தமிழகம், புதுவையில் கடும் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில் கவர்னர் கிரண் பேடியை மாற்ற மத்திய அரசு முடிவு செய் திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் ஏற்பட்டுள்ள வறட்சிக்கு மோசமான நிர்வாகம், ஊழல் அரசியல், அலட்சிய அதிகாரம் ஆகியவற்றுடன் மக்க ளின் சுயநல எண்ணமும், கோழைத்தனமான அணுகுமுறையும்தான் காரணம் என கிரண்பேடி தெரிவித்திருந்தார். முதல்வர் நாராயணசாமியுடன் எப் போதும் மல்லுக்கட்டி வரும் அவர் தற் போது சென்னை மக்கள் குறித்து பேசியுள் இது தொடர்பாக அவர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி திமுக புதுவை ஆளுநர் அலு வலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது. இந்த நிலையில் கிரண்பேடி விவகாரம் குறித்து அவையில் விவாதிக்குமாறு திமுக உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அது குறித்து விவாதிக்க அனுமதி அளிக்கவில்லை. எனினும் கிரண்பேடி தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்ததாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார். தமிழக அரசு கடும் எதிர்ப்புகளுக்கு மத் தி யில் மீண்டும் தமிழகத்தை சீண்டும் விதமாக கிரண்பேடி கருத்து தெரிவித் : துள்ளார். தமிழர்களின் மனம் பாதிக்கும் வகையில் தான் ட்வீட் செய்யவில்லை என கூறிவிட்டு தமிழக அரசை தற்போது வம்பிழுத்துள்ளார். புதுவையில் அவர் கூறுகையில் தமிழகத் தில் உள்ள எந்த அணையிலிருந்தும் புது வைக்கு தண்ணீர் வருவதில்லை. நீர் நிலைகள் தூர்வாரப்பட்டதால்தமிழகத்திற்கு கொடுக்கும் அளவுக்கு புதுவையில் தண்ணீர் இருக்கிறது. ஓராண்டில் பெய்த மழை தண்ணீரை சேர்த்துவைத்ததால் மட்டுமே புதுச்சேரியில் தண்ணீர் பிரச்னை இல்லை என தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சியான அதிமுகவையே கிரண்பேடி விமர்சனம் செய்துள்ளது பாஜக வுக்கு பெரும் குடைச்சலை அளித்துள்ளது. எனவே எதிர்க்கட்சிகளின் பிரச்சனையை சமா ளிக்க கிரண்பேடியை வேறு மாநிலத்துக்கு கவர்னராக மாற்ற பாஜக தலைமை முடிவு செய்துள்ளது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)