ரேஷன் கடைகளை திறக்காமல், போராட்டத்தில் ஈடுபட்டால், சம்பளம் பிடித்தம் செய்யப்படும்

ரேஷன் கடைகளை திறக்காமல், போராட்டத்தில் ஈடுபட்டால், சம்பளம் பிடித்தம் செய்யப்படும்' என்று, ரேஷன் ஊழியர்களை, கூட்டுறவு துறை எச்சரித்துள்ளது.கூட்டுறவு துறையின் கீழ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, கூட்டுறவு மொத்த பண்டக சாலை உள்ளிட்டவை, ரேஷன் கடைகளை நடத்தி வருகின்றன. இவற்றில் பணிபுரியும் ஊழியர்கள், ஊதிய உயர்வு வழங்குமாறு, அரசுக்கு, கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதற்கான பணிகள், 2018ல் துவக்கிய நிலையில், இதுவரை ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை . இதனால், ரேஷன் ஊழியர்கள், பேரணி, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரேஷன் ஊழியர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்குவது குறித்து, பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, சில ஊழியர்கள், கடைகளை திறக்காமல், போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், பொருட்கள் வாங்க முடியாமல், பொது மக்கள் சிரமப்படுவதாகவும் புகார்கள் வருகின்றன. மேலும், கடைகளை தாமதாக திறப்பதால், கூட்ட நெரிசலில் சிக்கி, பலரும் அவதிப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே, குறித்த நேரத்தில் கடையை திறக்காதது, கடைக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடுவது, கடைகளை திறந்து விட்டு, போராட்டத்திற்கு செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுவோரின் சம்பளத்தை பிடித்தம் செய்யுமாறு, கூட்டுறவு சங்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், ரேஷன் ஊழியர்கள் விடுப்பு எடுத்தால், அவர்களுக்கு மாற்று ஊழியர்களை நியமித்து, கடைகளை சரியான நேரத்திற்கு திறப்பதை உறுதி செய்யுமாறும், தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்