வைகோவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை

தேச துரோக வழக்கில் இன்று தீர்ப்பு: சென்னை, ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கடந்த 2009ம் ஆண் டில் சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். விழாவில் அவர் பேசும்போது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக குற் றஞ்சாட்டப்பட்டு அவர் மீது சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் தேசத் துரோக வழக்கு பதிவு செய் யப்பட்டது. சென்னை அமர்வு நீதி மன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கு, பின்னர் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத் தில் உள்ள, எம்.பி., எம்.எல். ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன் றத்திற்கு கடந்த ஆண்டு மாற்றப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. இவ் வழக்கு நீதிபதி ஜெ.சாந்தி முன்பாக விசாரிக்கப்பட்டு வந் தது. இவ்வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடி வடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது தேசத்துரோக குற்றச்சாட்டு நிரூபிக்கப் பட்டதால், வைகோ குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அப்போது நீதிமன்றத்தில் ஆஜரான வைகோ, தனக்கான தண்டனை குறித்து இன்றே அறிவிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதையடுத்து அவ ருக்கு ஓராண்டு சிறைத் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து மேல் முறையீடு செய்ய உள்ளதால், தீர்ப்பை நிறுத்திவைக்கக்கோரி வைகோ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அபராத தொகையை வைகோ உடனடியாக செலுத்தினார். இதையடுத்து வைகோ மேல் முறையீடு செய்ய ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட் டுள்ளது. தமிழகத்தில் வருகிற 18 தேதி நடக்க உள்ள மாநி லங்களவை உறுப்பினர் களுக்கான தேர்தலில் தி.மு.க. தரப்பில் ம.தி.மு.க.வுக்கு ஒரு இடம் வழங்கப்பட்டுள்ளது. அதில், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ போட்டி விடுவார் என அறிவிக்கப்பட்டுள் ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஒரு வழக்கின் தண்டிக்கப்பட்டவர் தண் டனைக் காலம் முடிந்து மேலும் 6 ஆண்டுகளுக்கு தேர் தலில் போட்டியிட முடியாது. எனவே, இவ்வழக்கில் வை கோவுக்கு தண்டனை விதிக்கப் தப்படும் பட்டிருப்பதால் அவர் மாநிலங் களவை தேர்தலில் போட்டியிடு பாட்டிற்காக வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேச துரோக வழக்கில் ) நீதிபதி தீர்ப்பு அளித்த பிறகு வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப் போது அவர் கூறியதாவது: இன்று எனக்கு மகிழ்ச் சியான நாள். வாழ்க்கையில் முக்கியமான நாள். குற்றவாளி என்று கூறியதும் உடனே தண்டனையை அறிவியுங்கள் புதிய என்று கூறினேன். குவதில் குறைந்தபட்ச தண்டனை இன்றைய கொடுங்கள் என்று நான் கேட்டதாக நீதிபதி கூறியது தவறு. அதிகபட்ச தண்டனை கொடுங்கள் என்றுதான் கோர்ட்டில் வாதம் செய்தேன். பாராளுமன்றத்தில் என் குரல் ஒலிக்காது என்றவர்களுக்கு நான் ஏதும் கூறவிரும்பவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)