இஸ்லாமிய எம்.எல்.ஏவை 'ஜெய் ஸ்ரீராம்' சொல்லச் சொல்லி கட்டாயப்படுத்திய பா.ஜ.க அமைச்சர்

இஸ்லாமிய எம்.எல்.ஏவை 'ஜெய் ஸ்ரீராம்' சொல்லச் சொல்லி கட்டாயப்படுத்திய பா.ஜ.க அமைச்சர்!மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இஸ்லாமியர்களை, ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி தாக்கிய சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.இஸ்லாமிய எம்.எல்.ஏவை 'ஜெய் ஸ்ரீராம்' சொல்லச் சொல்லி கட்டாயப்படுத்திய பா.ஜ.க அமைச்சர்!ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை வளாகத்தில் காங்கிஸ் கட்சியைச் சேர்ந்த இஸ்லாமிய எம்.எல்.ஏவை பா.ஜ.க அமைச்சர் ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார். அமைச்சரின் செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, நாடு முழுவதும் கும்பல் தாக்குதல் அதிகரித்துவருகிறது. மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இஸ்லாமியர்களை, ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி தாக்கிய சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. நாடு முழுவதும் இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இந்தநிலையில், பா.ஜ.க அமைச்சர் ஒருவர் அத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநில ஊரக வளர்ச்சி, வீட்டு வசதித்துறை அமைசர் சி.பி.சிங், அம்மாநில சட்டப்பேரவை வளாகத்தில் வைத்து காங்கிரஸைச் சேர்ந்த இஸ்லாமிய எம்.எல்.ஏ இர்பான் அன்சாரியை கட்டாயப்படுத்தி ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.அந்த விடியோவில் அன்சாரியை தோளில் இறுக்கமாகப் பிடித்து பேசும் சி.பி.சிங், 'இர்பான் பாய், ஜெய் ஸ்ரீராம் என்று சத்தமாகச் சொல்லுங்கள். உங்களுடைய முன்னோர்கள் ராமரின் வழி வந்தவர்கள். பாபரின் வழி வந்தவர்கள் அல்ல. நான், உங்களை பயமுறுத்தவில்லை. உங்கள் முன்னோர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டவர்கள் என்பதை மறவாதீர்கள்' என்று தெரிவித்துள்ளார். அவருடைய செயல்கள் அனைத்தும் விடியோவில் பதிவாகியுள்ளது. அவருடைய செயலுக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்துவருகின்றன.ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை வளாகத்தில் காங்கிஸ் கட்சியைச் சேர்ந்த இஸ்லாமிய எம்.எல்.ஏவை பா.ஜ.க அமைச்சர் ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார். அமைச்சரின் செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, நாடு முழுவதும் கும்பல் தாக்குதல் அதிகரித்துவருகிறது. மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இஸ்லாமியர்களை, ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி தாக்கிய சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. நாடு முழுவதும் இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்