பத்திரிகையாளர்கள் நலவாரியம் தேவை என்ற கோரிக்கையை ஏன் முன் வைக்கிறோம்..?

                                                                                                                                                       பத்திரிகையாளர்கள் நலவாரியம் தேவை என்ற கோரிக்கையை ஏன் முன் வைக்கிறோம்..? சட்டமன்றத் துறை, நீதித் துறை, நிர்வாகத் துறை, பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகத் துறை ஆகிய நான்கு தூண்களே மக்களாட்சி எனும் மணி மண்டபத்தைத் தாங்கிக் கொண்டிருக்கின்றன. பத்திரிகைதுறை தவிர மற்ற மூன்று துறைக்கும் (தூண்களுக்கும்) தனித்தனி அமைச்சகம் உண்டு,அமைச்சர்களும் உண்டு,இம்மூன்று துறைகளுக்கும் அரசு நிதி ஒதுக்குகிறது ஆனால்,நான்காவது தூணான பத்திரிகைதுறைக்கு தனி அமைச்சகம் இல்லை,தனி அமைச்சர் இல்லை பத்திரிகைதுறைக்கென...தனியாக எந்த ஒரு அரசும் 1- பைசா கூட நிதி ஒதுக்கியது இல்லை தமிழகத்தை பொறுத்தவரை பத்திரிகைதுறை செய்தித்துறையின் கீழ் வருகிறது, நாளிதழ் செய்தியாளர்களுக்கான அரசு அங்கீகார அட்டை,(Accreditation card) வார,இருவார,மாத இதழ்களுக்கு பிரஸ் கார்டு (PRESS CARD)ஆகியவை வழங்கப்படுகிறது ”அக்ரடேசன் கார்டு ”தாரர்களுக்கு பஸ் பாஸ்,ரயிலில் சலுகை கட்டணம் தவிர வேறு முறைப்படியான சலுகைகள் எதுவும் கிடைப்பதில்லை, "பிரஸ் கார்டு” தாரர்களுக்கு அதுவும் கிடையாது கிட்டத்தட்ட ”அக்ரடேசன் கார்டு ”வைத்திருப்போர், செய்திதுறையில் ஊதியம் வாங்கா..!! ஊழியராகவே பணி செய்ய நேரிடுகிறது பணிநேர வரைமுரையில்லா துறை பத்திரிகைதுறை தான்..எவ்வளவு நேரம் பணிபுரிந்தாலும் ஓவர்டைம் சம்பளம் கிடையாது செய்திதுறையானது அரசின் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்க நம்மை ஒரு கருவியாக பயன்படுத்துகிறதே தவிர..பத்திரிகையாளர்கள் நலனுக்காக ஒரு துரும்பைக்கூட கிள்ளி போட்டதில்லை,போடாது,போடப்போவதில்லை செய்திதுறை அமைக்கும் அக்கரடேசன் கமிட்டி,பிரஸ் கார்டு கமிட்டி,ஓய்வுதிய கமிட்டி செய்திதுறை பரிந்துரையோடு சட்டமன்றதுறை அமைக்கும் சீட்கமிட்டி ஆகியவற்றில் ஆட்சியாளர்களுக்கு வேண்டப்பட்ட பத்திரிகையாளர்களை கொண்டே நிரப்பிக் கொள்கிறார்கள் இந்த நடைமுறை எந்த கட்சி ஆட்சி வந்தாலும் தொடர்கிறது பத்திரிகையாளர்கள் இறந்தால் ,வழங்கப்படும் தொகை,ஓய்வூதியம்,சலுகை விலையில் வீட்டுமனைகள் வழங்குவதெல்லாம் செய்தித்துறை அல்ல.. வருவாய்துறை என்பது பலரும் அறியாத விசயம் சட்டமன்றம் பொதுவானது, சட்டமன்றத்திலும் இதுபோல் தான்,அரசாங்கத்துக்கு வேண்டப்பட்டோரை முன்னிருக்கையிலும்,அல்லாதோரை பின்னிருக்கையிலும் அமர இடம் ஒதுக்குகிரார்கள் பத்திரிகை விற்பனையை அடிப்படியாக கொண்டு அதாவது சர்க்குலேசனை கணக்கில் கொண்டு பத்திரிகையாளர்கள்அமரும் இடம் முடிவு செய்யவேண்டும் என்ற நமது கோரிக்கை காற்றோடு போய்விட்டது செய்திதுறையின் கீழ் பத்திரிகைதுறை இருப்பதால் அத்துறைக்கு நம்மால் பயனே தவிர.. நமக்கு பயன் ஏதும் இல்லை அதனால் தான் பத்திரிகையாளுக்கான நலவாரியம் தேவை என்ற கோரிக்கையை முன் வைக்கிறோம் நலவாரியம் வந்தால்..அதற்கு ஐஏஎஸ் அந்தஸ்தில் அதிகாரி நியமிக்கப்படுவார் யாரெல்லாம் பத்திரிகையாளர் என்ற வரையறை வந்துவிடும் களைகள் களையப்படும் உண்மையான பத்திரிகையாளர் சங்கங்கள் அங்கீகரிக்கப்படுவதுடன், அதன் பிரதிநிதிகள் வாரியத்தின் உறுப்பினர் ஆகலாம் அரசு வாரியத்திற்கென தனியாக நிதி ஒதுக்கீடு செய்யும் இறப்புக்கு வழங்கப்படும் தொகை,ஓய்வுதியம்,குடும்ப ஓய்வூதியம்,குழந்தைகளின் படிப்புக்கான தொகை,மருத்துவம் போன்றவை நலவாரியத்தின் கீழ் வந்துவிடும் சலுகை விலையில் வீட்டுமனை வாங்க நாம் வருவாய்த் துறையை நாட வேண்டும்,வாடகை வீடு வாங்க நாம் வீட்டு வசதிதுறையை நாட வேண்டும்,மருத்துவ காப்பீட்டுத்திட்டத்திற்கு சுகாதாரத்துறையை நாட வேண்டும் இதில் எந்த துறைக்கும் செய்திதுறைக்கு பரிந்துரை செய்யும் அதிகாரம் கூட இல்லை செய்தித்துறை நமக்கு கொடுக்கும் சலுகைகள் மீன் தூண்டிலில் மாட்டப்படும்”புழு” போன்றது..புழுவுக்கு ஆசைப்படும் மீனின் நிலைதான் நம் நிலை பத்திரிகைதுறை செய்தித்துறையின் கீழ் இருந்தால் சிலர் பயன் பெறுவார்கள். நலவாரியம் வந்தால் பலரும் பயன் பெறுவார்கள் எனவே தான் பத்திரிகையாளர்கள் நலவாரியம் தேவை என்ற கோரிக்கையை முன் வைக்கிறோம் சட்டமன்றத் துறை, நீதித் துறை, நிர்வாகத் துறை, பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகத் துறை ஆகிய நான்கு தூண்களே மக்களாட்சி எனும் மணி மண்டபத்தைத் தாங்கிக் கொண்டிருக்கின்றன. நான்கு கால்கள் (தூண்கள்) இருந்தால் அது நாற்காலி,நான்கில் ஒன்று முடங்கிப் போனால் அது முக்காலி ஆகிவிடும் நாற்க்காலி நாடாளாலாம்..அது முக்காலி ஆனால் அனைத்தும் முடங்கி நிர்வாகம் முடமாகிவிடும் நன்றி P.ராஜன்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)