தூத்துக்குடி பிரஸ் கிளப் நிர்வாகிகள் முதலமைச்சரிடம் கோரிக்கை மனு
பத்திரிக்கையாளர்களின் நலன் சார்ந்த நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்": தூத்துக்குடி பிரஸ் கிளப் நிர்வாகிகள் முதலமைச்சரிடம் கோரிக்கை மனுதூத்துக்குடி பிரஸ் கிளப் நிர்வாகிகள் இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பத்திரிக்கையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டி மனு அளித்தனர்மனுவைப் பெற்றுக் கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார் நிகழ்வின்போது அவருடன் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் S.P.சண்முகநாதன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோர் உடனிருந்தனர், தூத்துக்குடிக்கு வருகை புரிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் அதன் தலைவர் A.T.சண்முகசுந்தரம், செயலாளர் ட. பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்