அ.தி.மு.க., ராஜ்யசபா வேட்பாளர்களாக அறிவிக்கப்படலாம்

அ.தி.மு.க., ராஜ்யசபா வேட்பாளர்களாக, தம்பிதுரை, விஸ்வநாதன் ஆகியோர் அறிவிக்கப்படலாம் என, ஆளுங்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தமிழகத்தில் இருந்து, ஆறு பேரை ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வரும், 18ல் நடக்கிறது; நேற்று முன்தினம், வேட்புமனு தாக்கல் துவங்கியது.சட்டசபையில் தற்போதுள்ள, எம்.எல்.ஏ.,க்கள் பலத்தின் அடிப்படையில், அ.தி.மு.க., - தி.மு.க., ஆகிய கட்சிகள், தலா, மூன்று எம்.பி.,க்களை தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளது.தி.மு.க., வேட்பாளர்களாக, தொழிற்சங்க நிர்வாகி சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் அறிவிக்கப்பட்டு உள்ளனர். மற்றொரு எம்.பி., பதவிக்கு, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ போட்டியிடுகிறார்.அ.தி.மு.க.,வில், லோக்சபா தேர்தல் ஒப்பந்தத்தின்படி, பா.ம.க.,வுக்கு, ஒரு பதவி ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள, இரண்டு பதவிகளுக்கு கடும் போட்டி நிலவுகிறது. அதனால், ராஜ்யசபா எம்.பி., வேட்பாளராக தேர்வு செய்யப்பட வேண்டுமானால், கட்சி வளர்ச்சிக்கு, கணிசமான நிதி வழங்க வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு இசைவு தெரிவித்துள்ள, முன்னாள் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் விஸ்வாந்தன் ஆகிய இருவரும், அ.தி.மு.க., ராஜ்யசபா வேட்பாளர்களாக அறிவிக்கப்படலாம் என, அக்கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)