புதிய நிதி துறை செயலாளர் எஸ். கிருஷ்ணன்: தலைமை செயலாளர் சண்முகம் அறிவிப்பு

சென்னை : தமிழக அரசின் நிதி துறை செயலாளராக எஸ். கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளதாக தலைமை செயலாளர் சண்முகம் அறிவித்துள்ளார். தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பதவிக்காலம் நேற்று முன்தினம் முடிவடைந்ததையொட்டி தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக கே.சண்முகம் நியமிக்கப்பட்டார். நிதித்துறை செயலாளராக இருந்த சண்முகம், தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் பதவி காலியாக இருந்தது. இந்த பதவிக்கு யார் நியமிக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்தது. தற்போது முதல்வரின் முதன்மை செயலாளராக உள்ள செந்தில்குமார், வீட்டு வசதி துறை செயலாளராக உள்ள கிருஷ்ணன் ஆகியோரில் ஒருவர் புதிய நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தின் புதிய நிதி துறை செயலாளராக எஸ். கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை செயலாளர் கே.சண்முகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில், “வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மை செயலாளராக இருந்த எஸ்.கிருஷ்ணன் தமிழக அரசின் நிதித்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்படுகிறார். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ) முதன்மை செயலாளராக உள்ள ராஜேஷ்லக்கானி கூடுதல் பொறுப்பாக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையையும் சேர்த்து கவனிப்பார்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.தமிழகத்தின் புதிய நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எஸ். கிருஷ்ணன், 1989ம் ஆண்டு ஐஏஎஸ் ஆக தேர்வானார். இதைத்தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் சப்-கலெக்டராகவும், விருதுநகர் மாவட்ட கலெக்டராகவும் பணியாற்றினார். 14 மற்றும் 15வது நிதிக்குழு தலைவராக இருந்துள்ளார். நிதித்துறை (செலவினம்) | செயலாளராகவும், நிதித்துறை இணை செயலாளராகவும் பணியாற்றிய அனுபவம் உள்ளது. விளையாட்டு ஆணைய உறுப்பினர் செயலர், வணிக வரித்துறை செயலாளராகவும் இருந்துள்ளார். 2004ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை மத்திய நிதி அமைச்சரின் தனி செயலாளராகவும் எஸ். கிருஷ்ணன் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்