காத்திருந்து...!குறித்த நேரத்திற்கு வராத அலுவலர்கள்

உடுமலை நகராட்சியில், வரி வசூல் மையம், ஆதார் மையம் திறப்பது தாமதமாவதால், பொதுமக்கள் காத்திருக்கும் அவல நிலை உள்ளது.உடுமலை நகராட்சியில், சொத்து வரி, குடிநீர், பாதாளச்சாக்கடை இணைப்பு, வணிக வளாக வாடகை என, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வரி வசூல் இனங்கள் உள்ளன. மேலும், பிறப்புச்சான்று, இறப்புச்சான்று உள்ளிட்ட சான்றுகளுக்கு விண்ணப்பிக்க, தினமும் நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.இதற்காக, நகராட்சி தரை தளத்தில் வரி வசூல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஐந்து கவுன்டர்கள் உள்ள நிலையில், இருவர் மட்டுமே பணியில் உள்ளனர். காலை, 10:00 மணிக்கு திறக்க வேண்டிய வரி வசூல் மையம், 11:00 மணி வரை திறப்பதில்லை. திறந்தாலும், மக்களிடம் பணம் பெறுவதில் தாமதம் ஏற்படுவதோடு, வருவாய் கொடுக்கும் மக்களை அலட்சியமாக நடத்தி வருகின்றனர்.காலை, 10:00 மணி முதல், 4:00 மணி வரை இயங்க வேண்டிய மையத்தில், இடையில் பல மணி நேரம் அலுவலர்கள், கவுன்டர்களில் பணியில் இல்லாமல், மாயமாகி விடுகின்றனர்.பெரும்பாலும், மதியத்திற்கு மேல் செயல்படுவதில்லை. இதனால், நகராட்சிக்கு கட்டணம் செலுத்த வரும் மக்கள், பல மணி நேரம் காத்திருக்கும் அவல நிலை உள்ளது.கூடுதல் வசூல்பிறப்பு, இறப்புச்சான்றிதழ் பெற, தனியாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்ப படிவங்கள், வரி வசூல் மையத்தில் உள்ளது. படிவம், விலை இரண்டு ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், படிவம் வாங்க வருபவர்களிடம், 20 முதல் 200 ரூபாய் வரை, வரி வசூல் மையத்திலுள்ள ஒரு சிலர் வசூலித்து வருகின்றனர்.நகராட்சி நிர்வாகம் இயங்க, ஆதாரமாகவும், வருவாய் கொடுக்கும் இம்மையத்தில், மக்கள் அலைகழிக்கப்படும் நிலைக்கு தீர்வு காண, வரி வசூல் மையத்தில் கூடுதல் பணியாளர்களை நியமிக்கவும், முறையாக செயல்படவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், நகரமைப்பு பிரிவு, வருவாய் பிரிவு, பொறியியல் பிரிவு, பொதுப்பிரிவு உள்ளிட்ட அலுவலர்களும் அலுவலக நேரத்தில் முறையாக பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி கமிஷனர் ராஜாராம் கூறுகையில், ''சரியான நேரத்திற்கு திறந்து, முறையாக மையங்கள் செயல்பட வேண்டும். 'சிசிடிவி' பதிவு ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் உரிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.ஆதார் மையத்திலும் இதே நிலை நகராட்சி அலுவலகத்தில், ஆதார் மையம் செயல்படுகிறது. ஆதார் கார்டு எடுக்க, திருத்தங்கள் மேற்கொள்ள என, தினமும், 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகின்றனர்.இம்மையமும், தினமும், 11:00 மணிக்கு மேல் திறக்கப்பட்டு, ஒரு சில மணி நேரம் மட்டுமே இயங்குகிறது. இதனால், ஆதார் எடுக்க வரும் பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்கும் அவல நிலை உள்ளது. வரும் மக்களையும், பல காரணங்கள் கூறி அலைகழிக்கப்படும் சம்பவங்களும், அரசு நிர்ணயித்த கட்டணங்களை விட கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. இம்மையமும், முறையாக செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)