மேலூரில் கடையடைப்பு போராட்டம்

மதுரை : மேலுார் அருகே உள்ள ஒரு கிராமத்திருவிழாவின் போது ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் சமீபத்தில் கொல்லப்பட்டார். இதனை கண்டித்து இன்று மேலுாரில் கடையடைப்பு போராட்டம் நடப்பதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலுார் அருகே உள்ள கொடுக்கம்பட்டி திருவிழாவின்போது இரு தரப்பினர் இடையில் கடந்த ஜூன் 17 ல் மோதல் வெடித்தது. இதில், கற்கள், கம்புகளால் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர். இந்த மோதலில் மேலுாரை சேர்ந்த மாணவர் ஒருவர் இறந்தார். இந்த சம்பவத்திற்காக, மாணவர் படுகொலையை கண்டித்து இன்று ஒரு தரப்பினர் மேலுார் போராட்டம் நடத்த உள்ளனர். அதனை ஒட்டி மதுரை எஸ்.பி., மயில்வாகனன் தலைமையில் 800 க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். மேலுார் நகரில், தியேட்டர்களில் காலை காட்சி சினிமாக்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!