ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கு

தேனி நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேனி தொகுதி வாக்காளர் மிளானி என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், நடந்து முடிந்த தேனி நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத் குமார் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் பட்டுவாடா செய்துள்ளார். அதற்கு உண்டான வீடியோ ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக பல கோடி ரூபாய் விநியோகம் செய்யப்பட்டுள்ளது, இதேபோன்ற புகார் வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் வந்தபோது தேர்தல் ஆணையம் தேர்தலை நிறுத்தியது. ஆனால், தேனி தொகுதியில் அதிக அளவில் புகார் வந்தபோதும் ஏன் தேர்தலை தேர்தல் ஆணையம் நிறுத்தவில்லை” என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார். மேலும், தேனி நாடாளுமன்றத் தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம் செய்தும் வாக்காளர்களுக்கு அதிகளவில் பணம் பட்டுவாடா செய்து, அ.தி.மு.க வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளார். எனவே, இவரின் வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்