வத்தலக்குண்டு குடிநீருக்கு சிக்கல்

தேவதானப்பட்டி:வத்தலக்குண்டுக்கு குடிநீர் செல்லும் குழாய் உடைந்து நீர் வீணா கிறது.தேனி மாவட்டம் வைகை அணை பிக்கப் அணையில் நீர் எடுத்து குள்ளப்புரம் பிரிவில் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து குடிநீர் வழங்க திட்டப்பணிகள் முடித்தது.சோதனை ஓட்டம் முடிந்த - நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பேரூராட்சியில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில் குடிநீர்குழாய் செல்லும் வழியில் பல்வேறு இடங்களில் உடைந்துள்ளது. குறிப்பாக குள்ளப்புரம் தனியார் திருமண மண்டபம் அருகில் குழாய் உடைந்து கடந்த பத்து நாட்களாக நீர் வீணாகி விளைநிலங்களில் செல்கிறது. இதனால் வத்தலக்குண்டுக்கு குடிநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குழாயை சீரமைக்க குடிநீர்வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு