மத்திய உள்துறை அமைச்சகம். இணையம் மற்றும் சமூக வலைதளப் பயன்பாடுகளை நெறிப்படுத்தும் கொள்கை இது.
உலகை அச்சுறுத்தும் மிகப்பெரிய பிரச்னை டேட்டா திருட்டு. தனிநபர் தகவல்கள் தொடங்கி நிறுவனங்களின் டேட்டா வரை தினமும் பல இடங்களில் இந்தத் திருட்டால் பிரச்னை வந்துகொண்டேதானிருக்கிறது. அவரவர் அளவில் இதைத் தடுக்க முடிந்த முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். தனிநபரின் ஒரு புகைப்படமே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடுமென்றால், அரசாங்கங்களின் தகவல்கள் திருடு போனால்? அதுவும் அரசு ஊழியர்கள் பல்லாயிரக்கணக்கானோர் பல ஆயிரம் கணினி, மடிக்கணினி மற்றும் மொபைல் மூலம் இந்த டேட்டாவை அணுகும்போது அவை திருடவோ, லீக் ஆகவோ வாய்ப்புகள் அதிகம்தான். தினமும் உலகம் முழுவதுமிருந்து 30-க்கும் அதிகமான தடவை நம் இந்திய அரசின் சர்வர்களை ஹேக் செய்ய முயல்வதாக ஓர் அரசு அதிகாரி Economic times-க்கு அளித்த பேட்டியில் சொல்லியிருக்கிறார். ஹேக்கிங் மட்டுமே பிரச்னையல்ல. பயனர்களின் கவனக்குறைவாலும் டேட்டா லீக் ஆகலாம். அதை எப்படிச் சமாளிப்பது? இதற்காகவே இப்போது அரசு ஊழியர்களுக்காக முதல் முறையாக பாலிசி ஒன்றை வெளியிட்டிருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம். இணையம் மற்றும் சமூக வலைதளப் பயன்பாடுகளை நெறிப்படுத்தும் கொள்கை இது. இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் முக்கிய விஷயங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.1. அலுவலக கணினியிலிருந்து டேட்டாவை பென் டிரைவில் காப்பி செய்யக்கூட இனி அனுமதி வாங்க வேண்டும். அதிலும், சில குறிப்பிட்ட வகை தகவல்கள் என்கிரிப்ட் செய்யப்பட்டால் மட்டும் பென் டிரைவில் காப்பி செய்ய வேண்டும். என்கிரிப்ட் செய்யப்படுவதன் மூலம் இந்த பென் டிரைவ் வேறொருவர் கையில் கிடைத்தால் அந்தத் தகவல்கள் பயன்படாமல் போகலாம். 2. பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க் போன்றவற்றை அலுவலகத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்லவும் இனி அனுமதி வாங்க வேண்டும். இந்த அனுமதி எல்லோருக்கும் கிடைத்துவிடாது. தேவைப்படுபவர்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் மட்டுமே கொடுக்கப்படும். ட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை அரசுக்குச் சொந்தமான கேட்ஜெட்களான மொபைல், மடிக்கணினி மற்றும் கணினிகளில் பயன்படுத்தக்கூடாது.4. கூகுள் டிரைவ், டிராப் பாக்ஸ் போன்ற கிளவுட் (Cloud) நிறுவனங்கள் தகவல்களைச் சேமிக்க உதவுபவை. இந்த கிளவுட் சேவைகளில் அரசாங்கத் தகவல்களைச் சேமிப்பதும் தடை செய்யப்படுகிறது. மீறுபவர் மீது தகவல்களைக் கசிய விட்ட காரணத்துக்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.5. சில குறிப்பிட்ட தகவல்களை (Classified data) மின்னஞ்சல் மூலம் கூட யாருடனும் பரிமாறக்கூடாது. 6. அரசாங்க மின்னஞ்சல்களை பொது வைஃபை மூலம் பயன்படுத்தக் கூடாது. பொது இடங்களில் கிடைக்கும் இலவச வைஃபை மூலம்தான் ஹேக்கிங் அதிகம் நடைபெற வாய்ப்புகள் உண்டு. இதைத் தடுக்கவே இந்த முயற்சியை அரசு மேற்கொண்டிருக்கிறது.7. சில குறிப்பிட்ட வகை தகவல்களை அரசாங்கம் தரும் ஸ்டோரேஜ் டிவைஸ்களில் மட்டுமே சேமிக்க வேண்டும். வேறு எதிலும் சேமிப்பது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வழி வகுக்கும்.8. வீட்டிலிருந்து வேலை செய்யும்போது வீட்டு வைஃபையைப் பயன்படுத்தலாம். ஆனால், அதற்கும் சில விதிமுறைகள் உண்டு. அவர்கள் ரெளட்டரில் அரசின் மென்பொருள் ஒன்றை நிறுவ வேண்டும்.9. இந்தக் கொள்கை அரசு ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள், ஆலோசகர்கள், அரசு சார்பான பணிகளைச் செய்யும் தேர்டு பார்ட்டி நிறுவனங்கள் வரை எல்லோருக்கும் பொருந்தும்.