புகார் வந்தவுடன் எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும்

எந்த வழக்காக இருந்தாலும் காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி உத்தரவு திருச்சி எந்த வழக்காக இருந்தாலும் புகார் வந்தவுடன் தாமதமின்றி எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என காவல்துறை அதிகாரி களுக்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டார். தமிழ்நாடு காவல்துறையின் புதிய டிஜிபியாக நியமிக்கப் பட்டுள்ள ஜே.கே.திரிபாதி, ஒவ்வொரு மண்டலமாகச் சென்று காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி, மத்திய மண்டலம், திருச்சி மாநகர காவல்துறை அதி காரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சுப்பிரமணியபுரத்திலுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற் றது. இதில், சட்டம், ஒழுங்கு நிலவரம் குறித்து டிஜிபி ஜே.கே. திரிபாதி ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் மத்திய மண்டல் ஐஜி வி.வரதராஜு, மாநகர காவல் ஆணையர் ஆ.அமல்ராஜ், சரக டிஐஜிக்கள் பாலகிருஷ்ணன் திருச்சி), லோகநாதன் (தஞ்சை), எஸ்பிக்கள் ஜியாவுல்ஹக் திருச்சி), செல்வராஜ்(புதுக் கோட்டை), திஷா மித்தல் பெரம்பலூர்), ஸ்ரீனிவாசன் அரியலூர்). பாண்டியராஜன் கரூர்), மகேஸ்வரன் (தஞ்சாவூர்), துரை (திருவாரூர்), ராஜசேகரன் நாகப்பட்டினம்), மாநகர காவல் துணை ஆணையர்கள் என்.எஸ். நிஷா(சட்டம், ஒழுங்கு), ஆமயில் வாகனன் குற்றம், போக்குவரத்து), ஏஎஸ்பிடாங்க்ரே ப்ரவீன் உமேஷ் திருவெறும்பூர்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, மத்திய மண்டல மாவட்டங்களிலும், திருச்சி மாநகரிலும் தற்போதுள்ள சட்டம், ஒழுங்கு நிலவரம் குறித்து கேட்டறிந்ததுடன், இனிவரும் காலங்களில் மேற்கொள்ளப்பட்ட வேண்டிய செயல் திட்டங்கள் குறித்து காவல்துறை அதிகாரி களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து கூட்டத்தில் பங்கேற்ற காவல் அதிகாரிகள் கூறும்போது, "மத்திய மண்டல மற்றும் மாநகர காவல்துறை அதிகாரிகளுடன் 3.30 மணி நேரம் டிஜிபி ஆலோசித்தார். அப்போது, காவல்துறையின் செயல்பாடுகள் பொதுமக்கள் பெருமைப்படும் வகையிலும், குற்றங்கள் நடை பெறாத வகையிலும் சிறப்பாக இருக்க வேண்டும் என அறி வுறுத்தினார். மேலும், எந்த வழக்காக இருந்தாலும், புகார் வந்தவுடன் தாமதமின்றி எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். பொது மக்களை அலைக்கழிக்கக் கூடாது. புகார்தாரர்களை காவல் நிலையத்தில் நீண்டநேரம் காக்க வைக்கக்கூடாது. ஒவ்வொரு காவல்நிலைய எல்லையிலும் உள்ள குடியிருப்போர் சங்க நிர்வாகிகளுடன், அந்தந்த பகுதி காவல்துறையினர் கலந்து பேச வேண்டும். அவர்கள் மூலமாகத் தேவையான தகவல்களைப் பெறவும், பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், காவல் நிலையங்களில் நீண்டகாலமாக நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். சமூக விரோத செயல்களை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும். ரோந்துப் பணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் காவல்துறையினரின் அணுகுமுறை மக்களுடன் இணைந்திருக்கும் வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார் என்றனர். ப முன்னதாக, சுப்பிரமணியபுரத் திலுள்ள காவலர்களுக்கான நிறை வாழ்வு பயிற்சி முகாமை டிஜிபி ஜே.கே.திரிபாதி பார்வையிட்டார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)