காட்டன் சூதாட்டத்தை நடத்தும் சமூக விரோதிகளுடன் காவல்துறை கைகோர்த்திருப்பது வேதனையை தருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
வே வேலூர் மாவட்டத்தில் அப்பாவி தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சும் காட்டன் சூதாட்டத்தை தடுக்க வழியின்றி, காட்டன் சூதாட்டத்தை நடத்தும் சமூக விரோதிகளுடன் காவல்துறை கைகோர்த்திருப்பது வேதனையை தருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். வேலூர் மாவட்டத்தில் கிராமங்கள் தொடங்கி நகரங்கள் வரை அனைத்து பகுதிகளிலும் தங்கு தடையின்றி காட்டன் சூதாட்டம் நடந்து வருகிறது. குறிப்பிட்ட எண்ணில் பணம் கட்டினால், கட்டிய பணத்தை காட்டிலும் அதிக மடங்கு பணம் பரிசாக வழங்கப்படும் என்ற அடிப்படையில் இந்த காட்டன் சூதாட்டம் நடைபெறுகிறது. ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் கூடுதல் பணம் கிடைக்கிறதே என்ற ஆசையில் அதில் பணத்தை கட்டி ஏமாந்து வருகின்றனர்.வேலூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் காட்டன் சூதாட்டத்தால் சீரழிந்து நடுத்தெருவில் நிற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. குடியாத்தத்தில் காட்டன் சூதாட்டம் நடத்துபவர் குளிர்சாதன வசதி கொண்ட, முழு தகவல் தொழில்நுட்ப வசதிகளுடன் அமைந்த அலுவலகத்துடன் காட்டன் சூதாட்டம் நெட்ஒர்க்குடன் இயங்கி வருவது குறும்படமாகவே செய்தியாளர் ஒருவரால் படம் பிடிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதேபோல் மூணு சீட்டு என்ற சூதாட்டம் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை 5 கட்டங்களாக நடத்தப்பட்டு ரிசல்ட் வெளியிடப்படுகிறது. கம்ப்யூட்டர் மூலம் ரிசல்ட் வரும் என்று ரூ.10, ரூ.20, ரூ.30 என தொடங்கி ஆயிரம் ரூபாய் வரை இந்த கம்ப்யூட்டர் லாட்டரியில் பொதுமக்கள் பணம் கட்டி உழைத்த பணத்தை இழக்கிறார்கள். காட்டன் சூதாட்டத்தால் பாதிக்கப்பட்ட குடியாத்தம் பகுதியை யதாவது:வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை தலைமையிடமாக கொண்டு வேலூர் மாவட்டம் முழுவதும் இரு நம்பர் காட்டன் சூதாட்டம் மற்றும் மூன்று நம்பர் ஆன்லைன் சூதாட்டம் கொடி கட்டி பறக்கிறது. தினந்தோறும் கூலி வேலை செய்து ரூ.100 முதல் ரூ.500 வரை வருமானம் ஈட்டும் கூலித் தொழிலாளிகளின் வருமானத்தை இந்த காட்டன் . சூதாட்டம், மூணுசீட்டு, ஒரு நம்பர் லாட்டரி மூலமாக பகல் கொள்ளையடித்து வருகின்றனர். இதை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட காவல்துறை உருப்படியான நம்பகமான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.தனிப்பிரிவு போலீசார் என்ன செய்கிறார்கள்?ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் ஒரு தனிப்பிரிவு ஏட்டு அல்லது எஸ்எஸ்ஐ ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களது காவல் நிலைய எல்லைக்குள் நடக்கும் சம்பவங்களை முன்கூட்டியே அறிந்து அதை எஸ்பிக்கு தெரிவிப்பார்கள். ஆனால் தற்போது தனிப்பிரிவினர், சம்பந்தப்பட்ட காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தொடங்கி அனைவருடனும் கூட்டு சேர்ந்து அக்காவல் நிலைய எல்லைக்குள் நடைபெற போவது, நடந்தது என்று எதையும் தெரியப்படுத்தாமல் அப்படியே மறைத்துவிடுகின்றனர். இதற்காக அவர்களுக்கு தனியான கவனிப்பு நடந்து விடுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.