தாசில்தாரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.93.50 லட்சம் நகைகள் பறிமுதல்
தெலங்கானா பெண் தாசில்தாரிடம் இருந்து கணக்கில் வராத 93 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் பணத்தை, குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.ரெங்கா ரெட்டி மாவட்டத்தின் கேஷம்பேட் பகுதி தாசில்தாராக இருப்பவர் லாவண்யா. இவர், பாஸ்கர் என்பவரின் ஏக்கர் நிலம் சார்ந்த ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய, கொண்டுர்கூ கிராம் வருவாய் அலுவலர் அந்தையா (Antaiah) மூலம் 8 லட்சம் ரூபாயை லஞ்சமாக கேட்டுள்ளார்.இதனை தர ஒப்புக்கொண்ட பாஸ்கர், குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடமும் புகார் அளித்துள்ளார். அதனைத்தொடர்ந்து அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில் செயல்பட்ட பாஸ்கர், முதற்கட்டமாக 4லட்சம் ரூபாயை அந்தையாவிடம் வழங்கியபோது, அந்தையா போலீசாரிடம் சிக்கினார்.தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், அவர் அளித்த தகவலை கொண்டு ஹயாத் நகரில் இருக்கும் தாசில்தார் லாவண்யா வீட்டை சோதனையிட்டனர். இதில் கணக்கில் வராத தங்க கட்டிகள், தங்க நகைகள் மற்றும் ரூபாய் நோட்டுக்கள் என 93 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சிக்கியதுஅவற்றை பறிமுதல் செய்துள்ள அதிகாரிகள், லாவண்யா மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாசில்தாரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.93.50 லட்சம் நகைகள் பறிமுதல்