ஆர்.டி.ஐ., சட்ட திருத்த மசோதா எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு

புதுடில்லி,:தேர்தல் ஆணையருக்கு இணையான ஊதியம், அதிகாரம் கொண்ட, மத்திய தலைமை தகவல் ஆணையரின் அந்தஸ்தை குறைக்கும், சட்ட திருத்த வரைவு மசோதா, லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், கடும் எதிர்ப்பு தெரிவித்தன; திரிணமுல் காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது.தகவல் அறியும் உரிமை சட்டம், 2005ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. மத்திய தலைமை தகவல் ஆணையருக்கு, தேர்தல் ஆணையருக்கு இணையான ஊதியம் மற்றும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பிரதமர் அலுவலக இணை அமைச்சர், ஜிதேந்திர சிங், தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதாவை, லோக்சபாவில் தாக்கல் செய்தார். சட்ட திருத்தப்படி, தகவல் ஆணையரின் ஊதியம் மற்றும் அதிகாரம் குறைக்கப்படுகிறது.இந்த மசோதாவுக்கு, காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆணைய நிர்வாகத்தை முறைப்படுத்தவும், அதன் செயல்பாடுகளை வலுப்படுத்தவும் அரசு திட்ட மிட்டு உள்ளது. அதற்காகவே, இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது,'' என்றார்.லோக்சபா, காங்., தலைவர், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ''இதன் மூலம், மத்திய தகவல் ஆணையரின் சுதந்திரமான செயல்பாட்டுக்குஅச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது,'' என்றார்.காங்., மூத்த எம்.பி., சசி தரூர், ''இது, சட்ட திருத்த மசோதா அல்ல. தகவல் அறியும் உரிமை சட்டத் தையே நீக்கும் மசோதா,'' என, குற்றம் சாட்டினார். அனைத்திந்திய மஜ்லிஸ் - இ - இட்டாஹாதுல் முஸ்லிமின் கட்சி, எம்.பி., அசாதுதின் ஓவைசி, ''இந்த சட்ட திருத்த வரைவு மசோதா, அரசியல் அமைப்புக்கும், பார்லிமென்டுக்கும் மிரட்டல் விடுப்பது போல இருக்கிறது,'' என்றார்.திரிணமுல் காங்., - எம்.பி.,க்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, சட்ட திருத்த வரைவு மசோதாவுக்கு, நடத்திய ஓட்டெடுப்பில், 224 பேர் ஆதரவு அளித்தனர்.திரிணமுல் மற்றும் மஜ்லிஸ் - இ - இட்டாஹாதுல் முஸ்லிமின் கட்சி வெளிநடப்புசெய்தன. திருநங்கையர் மசோதா திருநங்கையர் உரிமை, பாதுகாப்பு சட்ட மசோதாவை, சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர், தாவர்சந்த் கெலாட், லோக்சபா வில் நேற்று தாக்கல் செய்தார்.இதன் மூலம், சமூக, பொருளாதார மற்றும் கல்வியில் அவர்களுக்கு உரிய உரிமைகள் பாதுகாக்கப்படும்.இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது, காங்., - எம்.பி., சசி தரூர் தலைமையில், அக்கட்சி, எம்.பி.,க்கள், கர்நாடக சட்டசபை விவகாரத்தை எழுப்பி, அமளியில் ஈடுபட்டனர். பின், வெளிநடப்பு செய்தனர்.முறைப்படுத்தப்படாத பண முதலீடுகளை தடை செய்யும் சட்ட மசோதாவை, நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன், லோக்சபாவில் தாக்கல் செய்தார்.மனித உரிமை மசோதா மனித உரிமை ஆணைய சட்ட திருத்த மசோதாவை, உள்துறை இணை அமைச்சர், நித்யானந்த் ராய், லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்தார்.''சட்ட திருத்தப்படி, தேசிய மற்றும் மாநில, மனித உரிமை ஆணையர் பதவிக்காலம், ஐந்து ஆண்டுகள் என்பதில் இருந்து, மூன்று ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், நிர்வாகம் மற்றும் நிதி விவகாரத்தில் கூடுதல் அதிகாரம் வழங்கப்படும்,'' என, அமைச்சர் ராய் கூறினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)