தமிழகத்திலுள்ள 33 மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசின் தலைமைச்செயலாளர் சண்முகம் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை : தமிழகத்திலுள்ள 33 மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசின் தலைமைச்செயலாளர் சண்முகம் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் மாவட்ட ஆட்சியர்கள் தங்களது மாவட்டங்களில் அரசு திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை, தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.மேலும் அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படும் பகுதிகளுக்கு சென்று நேரடி கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊரக வேலைவாய்ப்பு, குடிமராமத்து போன்ற திட்டங்கள் எல்லாம் மாவட்டங்களில் முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும். வேளாண் மற்றும் அவை சார்ந்த துறைகளின் மேம்பாட்டிற்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம் அரசு திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும், தலைமைச் செயலாளர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.சுகாதாரம், கல்வி, வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு, உள்ளிட்டவை முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்தும் மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும். அரசு அறிவித்துள்ள திட்டங்கள், வளர்ச்சி பணிகளை உரிய நேரத்திற்குள் முறையாக செய்து முடிக்க வேண்டும். அரசின் மேம்பாட்டு திட்டங்களை கண்காணிக்கும் அதே நேரத்தில் மக்களின் கருத்துகளையும் அறிய வேண்டும். பலரிடம் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்குகள் கூட இல்லாமல் உள்ளது அத்தகைய மக்கள் முறையான ஆவணங்களை பெற வழி செய்ய வேண்டும்.முக்கியமாக சட்டம் ஒழுங்கு பராமரிப்புக்கு, மாவட்ட ஆட்சியர்கள் கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்