தீர்ந்தது தகராறு: தமிழை தழுவியது சுப்ரீம் கோர்ட்!புதுடில்லி
தீர்ந்தது தகராறு: தமிழை தழுவியது சுப்ரீம் கோர்ட்!புதுடில்லி : வரலாற்றில் முதல் முறையாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு விபரங்கள் தமிழில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு விபரங்கள் வெளியிடப்படும் மொழிகளின் பட்டியலில் தமிழ் இடம் பெறாமல் இருந்தது பெரும் சர்ச்சையாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று (ஜூலை 18) 113 முக்கிய வழக்குகளின் தீர்ப்பு விபரங்கள், சுப்ரீம் கோர்ட் இணையதளத்தில் 9 பிராந்திய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. 113 வழக்குகளின் தீர்ப்பு பட்டியலில் 98 மற்றும் 99 இடங்களில் தமிழக வழக்கின் தீர்ப்பு, தமிழிலில் மொழியாக்கம் செய்யப்பட்டு, பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.சரவண பவன் உரிமையாளர் ராஜபாலன், கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் மீது மார்ச் 29 ம் தேதி அளிக்கப்பட்ட உத்தரவு மற்றும் நீலகிரியை சேர்ந்த ஜோசப் ஈஸ்வரன் வாப்ஷேரின் சொத்துக்கள் தொடர்பாக அவரது வாரிகள் தொடர்ந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு ஆகிய 2 வழக்குகளில் தீர்ப்புகள் தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிடப் பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கள் தமிழில் வெளியிடப்பட்டுள்ளதை தமிழக வழக்கறிஞர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.