தமிழகத்தின் மாவட்டங்கள் 35 ஆக உயர்வு தென்காசி, செங்கல்பட்டு புதிய மாவட்டமாக உதயம்
பொதுமக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மாவட்டமும்தென்காசியை தலைமையிடமாக கொண்டு மற்றொருபுதியமாவட்டமும் உருவாக்கப்படும் என்றுமுதலமைச்சர் எடப்பாடியார் சட்டப்பேரவையில் அறிவித்தார். முதல்வர் எடப்பாடியாளர் சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடியார் 110 விதியின்கீழ்பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விபரம் வருமாறு: தற்போது பெரியமாவட்டங்களாக உள்ளதிருநெல்வேலி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைப்பிரிக்கவேண்டும் என்று அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து வந்த கோரிக்கைகளை பரிசீலித்துநிர்வாக வசதிக்காக திருநெல்வேலி மாவட்டத்தைப்பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் உருவாக்கப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தைப்பிரித்து செங்கல்பட்டைதலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்படும் என்றுமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விரு மாவட்டங்களுக்கும் தலா ஒரு இந்திய ஆட்சிப்பணி அதிகாரிதனிஅதிகாரியாக நியமிக்கப்படுவர் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு அம்மாவின் அரசு அதிக முன்னுரிமை அளித்து வருகின்றது. ஒவ்வொருதிங்கட்கிழமையும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டமும், ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் வட்டாட்சியர் தலைமையில் அம்மா திட்டமுகாம்களும் நடத்தப்படுகிறது. விவசாயிகள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகளைதீர்வுகாண்பதற்கான சிறப்பு குறைதீர்வு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. முதல்வரின் சிறப்பு குறைதீர்வு திட்டம் மேற்படி குறைதீர் நிகழ்வுகளில் பட்டா மாற்றம், சமூக பாதுகாப்பு திட்டம் மற்றும் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் ) வழங்கப்படும் முதியோர் ஓய்வூதியம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம், இலவசவீட்டுமனைப்பட்டா, சாதிச் சான்றிதழ், வருமானச்சான்றிதழ், வாரிசு சான்றிதழ் போன்ற சான்றிதழ்கள் உடனுக்குடன்வழங்கப்பட்டுவருகிறது. அரசு எடுத்துவரும் இத்தகைய முயற்சிகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் ஒரு சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை அம்மாவின் அரசு செயல்படுத்தும். இத்திட்டத்தின் மூலம் நகரங்களில் வார்டுகளிலும், சென்று மனுக்களை பெற்று, தீர்வு காண, முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வுதிட்டத்தை ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், அனைத்து நகர்புற வார்டுகளிலும், கிராமங்களிலும் உரிய விளம்பரத்திற்கு பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவுப்படி ஒரு குறிப்பிட்ட நாளில் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை / நகர்புற வளர்ச்சித் துறை மற்றும் பிற துறைகளைச் சார்ந்த ஒரு அலுவலர் குழு, ஆகஸ்ட் மாத இறுதிக்குள் சென்றுமனுக்களைப் பெறுவார்கள். இம்மனுக்கள் அனைத்தும் கணினியில் பதியப்பட்டு, சம்பந்தப்பட்டதுறைக்கு ஒருவாரகாலத்திற்குள் அனுப்பப்படும். அம்மனுக்கள் மீதுஒருமாதகாலத்திற்குள் தீர்வு எட்டப்படும். வட்ட அளவில் விழாக்கள் மேற்குறிப்பிட்ட மனுக்களின் மீதான தீர்விற்குப்பின், செப்டம்பர் மாதத்தில் அமைச்சர்கள் தலைமையில் வட்ட அளவிலானவிழாக்கள் நடத்தப்படும். பல்வேறு நலத் திட்டப் பயன்களை இவ்விழாவில் வழங்குவதோடு, மக்களின் அடிப்படைத் தேவைகளான சாலைகள், தெருவிளக்குகள், மருத்துவம், சுகாதாரம் மற்றும் குடிநீர் வழங்கல் போன்ற அடிப்படை தேவைகளுக்கும் இவ்விழாவின்போதுதீர்வுகாணப்படும். மக்களின் குறைகளுக்கு தீர்வு காணும் மாநில அரசின் முக்கியமான சிறப்புத் திட்டமாக இத்திட்டம் திகழும். இந்த சிறப்புத் திட்டத்தை செம்மையாக நடைமுறைபடுத்துவதற்குஒருவட்டத்திற்கு 25 ஆயிரம் ரூபாய்வீதம்76லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ரூ.66.44 கோடியில் கட்டிடங்கள் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணிமற்றும் மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் கோட்டங்களுக்கு 6.26 கோடி ரூபாய் செலவில் புதிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலக மற்றும் குடியிருப்புகட்டடங்களும், நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர்,திருநெல்வேலி மாவட்டத்தில் திசையன்விளை, மதுரை மாவட்டத்தில் கள்ளிக்குடி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆர்.எஸ். மங்கலம், கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆனைமலை, கிருஷ்ணகிரிமாவட்டத்தில் அஞ்செட்டி, கன்னியாகுமாரி மாவட்டத்தில் திருவட்டார் மற்றும் கிள்ளியூர்,திண்டுக்கல் மாவட்டத்தில் குஜிலியம்பாறை, திருவள்ளூர் மாவட்டத்தில் ஆர்.கே.பேட்டை , விருதுநகர் மாவட்டத்தில் வத்ராயிருப்பு மற்றும் கரூர் மாவட்டத்தில் புகளூர் ஆகிய 13வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு அலுவலகமற்றும் குடியிருப்புகட்டடங்கள் 60.18 கோடி ரூபாய் செலவிலும், ஆக மேற்கண்டகட்டடங்கள் கட்டப்படும். ரூ.30.29 கோடியில் மறு நில அளவை பணிகள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், சூரிய ஒளியில் செயல்படும் மீன் உலர் கூடங்கள் அமைக்கவும், மீன்வள சூழலை மீள ஏற்படுத்த செயற்கை உறைவிடங்கள் அமைக்கவும், கடல்/உவர் நீர்மீன்குஞ்சு வங்கி அமைக்கவும், ஒருங்கிணைந்த கடல் மீன் வளர்ப்பு அலகுகள் அமைக்கவும், மீனவமக்களின் மாற்று வாழ்வாதாரத்திற்காகமெல்லுடலிகள் மற்றும் கடற்பாசி வளர்ப்பு அலகுகள் ஏற்படுத்தவும், மீனவ இளைஞர்களுக்கு நடமாடும்மீன்விற்பனை நிலையங்கள் ஏற்படுத்தவும், 31.15 கோடி ரூபாய் செலவில் வழிவகை செய்யப்படும். மேம்படுத்தப்பட்ட 29 நகரங்களில், வகையீட்டுபூகோள நிலைக்கலன்கருவி மற்றும் மின்னணுநில அளவைகளைப் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, மறு நில அளவை பணிகள்30.29 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு,3தொகுதிகளாக 3 ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும். இவ்வாறு முதலமைச்சர்