சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக கழக அரசு திகழ்கிறது அமைச்சர் நிலோபர் கபீல் பேட்டி
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் தொழி லாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கழக அரசு சிறுபான்மை மக்கள் நலனில் அக்கறை கொண்டு சிறப்பாக செயல் பட்டு வருகிறது. அம்மாவின் அரசு சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக விளங்கு கிறது. அதனால் இஸ்லாமி யர்களும், கிறித்தவர்களும் கழக வேட்பாளர் ஏ.சி. சண்முகத்துக்கு வாக்களிக்க தயாராகி விட்டனர். வாணியம்பாடி சட்ட மன்ற தொகுதியில் அரசு தொழிற்பயிற்சி மையம், தொழிலாளர் நல அலுவலகம் மற்றும் சாலைகள் பாலங் கள் உள்ளிட்ட மக்களின் அனைத்து அடிப்படைத் தேவைகளையும் அம்மாவின் அரசு பூர்த்தி செய்துள்ளது. ரூ.9 கோடியில் ஆண் டியப்பனூர் அணையை சுற்றுலா மையமாக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அரசு தொழிற் பயிற்சி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற் கான பணிகளை போர்க்கால் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. அம்மாவின் திட்டங் கள் அனைத்தும் மக்களுக்கு சென்று அடைந்துள்ளதால் அனைவரும் சந்தோஷமாக உள்ளனர். அம்மாவின் ஆட்சி அமைய வேண்டும் என்று தமிழக மக்கள் உறுதியாக உள்ளனர். கழக கூட்டணி வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவ தால் மக்கள் இரட்டை இலைக்கு வாக்கு அளிக்க தயாராக உள்ளனர். இஸ் லாமியர்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள ஒவ்வொரு ஆண்டும் ரூ 65 கோடி அரசு நிதி ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது. உலமாக்களின் ஓய்வூதியம் ரூபாய் 1500 ஆக உயர்த்தப் பட்டுள்ளது. காஜிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் ரூபாய் 20000 மதிப்பூதியம் வழங்கப்ப டுகிறது. இஸ்லாமியர்களின் நலனுக்காக பாடுபடுகின்ற ஒரே அரசு அம்மாவின் அரசு ஆகும். இவ்வாறு அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் கூறினார்.