சிவா எம்.எல்.ஏ. தலைமையிலான பொதுக்கணக்கு குழுவில் கிடுக்கிப்பிடி
மின்துறை அதிகாரிகள் திணறல்புதுச்சேரி, ஜூன். 25 புதுவை அரசின் மின்துறை சார்பில் மின்சாரத்தை கணக் கிட ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டு வருகிறது. இதற்காக சீனாவில் இருந்து ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்யப்பட்டுள் ளது. இந்த ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலில் ஊழல், முறை கேடுகள் நடந்திருப்பதாக சட்டமன்ற கூட்டத்தில் உறுப் பினர்கள் புகார் செய்தனர். இதன்பேரில் சி.பி.ஐ. விசா ரணைக்கு உத்தரவிட வேண் டும் என்றும் வலியுறுத்தினர். இந்நிலையில் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் தொடர்பாக பொதுகணக்கு குழு விசா ரணை நடந்து வருகிறது. இதுதொடர்பான சட்டமன்ற பொது கணக்குக்குழு கூட்டம் சட்டமன்ற வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பொது கணக்கு குழு தலைவர் சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங் கினார். கூட்டத்தில் உறுப்பினர் கள் அன்பழகன், ஆர்.கே.ஆர். அனந்தராமன், அசனா, தீப்பாய்ந்தான், விஜயவேணி, பாஸ்கர் ஆகியோர் பங் கேற்றனர். கூட்டத்தில் மின்துறையில் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்தது தொடர்பாக விவா திக்கப்பட்டது. இதனால் மின் துறை அதிகாரிகள் பங்கேற்ற னர். கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் ஸ்மார்ட் மீட்டர் வாங்க முடிவு செய்தது யார்? ரூ.50 கோடியில் ஸ்மார்ட் மீட்டர் வாங்க எப்படி டெண்டர் விடப் பட்டது? தேசிய அளவிலான டெண்டரா? உலகளாவிய டெண்டரா? இந்த டெண்டரில் பங்கேற்றவர்கள் யார்? என தொடர்ச்சியாக பல கேள் விகளை எழுப்பினர். இதற்கு மின்துறை அதிகாரிகளிடம் இருந்து சரியான பதில் இல்லை. இதனால் இந்த கேள் விகளுக்கு அடுத்த கூட்டத்தில் பதில் தர வேண்டும். இல்லா விட்டால் சி.பி.ஐ. விசா ரணைக்கு பரிந்துரை செய் வோம் என உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.