திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் தலைக்கு 50 ரூபாய் வீதம் பக்தர்களிடம் கூடுதலாக கட்டாய வசூல்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் தமிழகம் முழுவதும் மிகவும் பிரசித்திபெற்ற ஆலயமாக விளங்குகிறது. இந்தக் கோயிலுக்கு தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அந்தவகையில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வேண்டுதல் காரணமாக மாரியம்மனுக்கு முடி காணிக்கை வழங்குவார்கள். அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் மொட்டை அடிப்பதும், பெண்கள் சிலர் பூமுடி காணிக்கை செலுத்துவதும் வழக்கம். சமயபுரம் கோயிலில் ஒரு வாரத்துக்குப் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்துகிறார்கள் எனக் கோயில் நிர்வாகம் கூறுகிறது. அப்படி முடி காணிக்கை செலுத்துவதற்குத் தலைக்கு 30 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மொட்டையடிக்க பணம் செலுத்தும் பக்தர்களுக்கு, பிளேடு மற்றும் சந்தன வில்லை வழங்கப்படுகிறது. அதை முடி காணிக்கை செலுத்தும் மண்டபத்தில் உள்ள முடிதிருத்துவோரிடம் கொடுத்து மொட்டை போட்டுக் கொள்ளலாம். பக்தர்களுக்கு மொட்டை அடிக்கும் முடித்திருத்துவோர் பணியில் 160 பேர் உள்ளனர். அவர்களுக்கு ஒரு மொட்டை போடுவதற்கு ரூபாய் 25 ரூபாய் கோயில் நிர்வாகம் சார்பில் வழங்கப்படுகிறது. ஆனால், அவர்கள் முடிகாணிக்கை செலுத்தும் பக்தர்களிடம் பணமோ, கையூட்டோ பெறக் கூடாது. பக்தர்கள் கொடுக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்புகள் கோயிலில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கோயிலுக்கு முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம் முடி திருத்தம் செய்பவர்கள், தலைக்கு 50 ரூபாய் வீதம் பக்தர்களிடம் கூடுதலாக கட்டாய வசூல் செய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)