ஈரான மது போர் தொடுக்கமாட்டோம்; அப்படி தொடுத்தால் அது நீண்ட காலம் நீடிக்காது: டிரம்ப்

வல்லரசு நாடுகளுடன் ஈரான் ஏற்படுத்திய அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா, அந்த நாட்டின் மீது தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் தங்கள் நாட்டுக்கு உளவு பார்க்க வந்த அமெரிக் காவின் ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து, அந்த நாட்டின் மீது ராணுவ தாக்குதலுக்கு டிரம்ப், உத்தரவிட்டார். கடைசி நேரத்தில் அந்த தாக்குதல் பற்றிய விளைவுகளை அறிந்து அவர் வாபஸ் பெற்றார். இருப்பினும் அமெரிக்காவும், ஈரானும் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் பாக்ஸ் பிசினஸ் நியூசுக்கு டிரம்ப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், “ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்குமா?என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டிரம்ப், "நல்லது. நாங்கள் போர் தொடுக்க மாட்டோம் என நம்புகிறேன். ஆனால் ஏதேனும் நடந்தால் நாங்கள் வலுவான நிலையில் இருக்கிறோம். அப்படி போர் தொடுத்தால், அது நீண்ட காலம் நீடிக்காது" என பதில் அளித்தார். டிரம்பின் இந்தப் பதில், சர்வதேச அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்