தமிழகம் முழுவதும் 26 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகம் முழுவதும் 26 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மகேஷ் குமார் அகர்வால் காவல்துறை ஆபரேசன் பிரிவு ஏடிஜிபியாகவும், வெங்கட்ராமன் சென்னை சைபர் கிரைம் பிரிவு ஏடிஜிபியாகவும், வினித் தேவ் வாங்க்டே மாநிலக் குற்ற ஆவணக் காப்பக ஏடிஜிபியாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். சத்தியபிரியா போலீஸ் கல்லூரியின் டிஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். ரயில்வே டிஐஜியாக நியமிக்கப்பட்ட பாலகிருஷ்ணன், திருச்சி சரக டிஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சேலம் சரக டிஐஜியாக இருந்த செந்தில் குமார் ஐஜியாக பதவி உயர்வு பெற்று சேலம் நகர போலீஸ் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் சரக டிஐஜியாக இருந்த வனிதா ஐஜியாக பதவி உயர்வு பெற்று தமிழக ரயில்வே காவல்துறை ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிரேம் ஆனந்த் சின்ஹா ஐஜியாக பதவி உயர்வு பெற்று தென்சென்னை காவல்துறை கூடுதல் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஈஸ்வரமூர்த்தி சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராகவும் பிரவீன்குமார் அபிநவ் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று நெல்லை டிஐஜியாகவும் கபில் குமார் சரத்கர் வடசென்னை காவல்துறை இணை ஆணையராகவும், ரூபேஷ் குமார் மீனா டிஐஜியாக பதவி உயர்வு பெற்று ராமநாதபுரம் டிஐஜியாகவும் ராமநாதபுரம் டிஐஜியாக இருந்த காமினி வேலூர் டிஐஜியாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆனிவிஜயா- டிஐஜியாக பதவி உயர்வு பெற்று மதுரை சரக டிஐஜியாகவும் , மதுரை சரக டிஐஜியாக பிரதீப் குமார் சேலம் டிஐஜியாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நஜ்மல் ஹோடா ஐஜியாக பதவி உயர்வு பெற்று தமிழ்நாடு அச்சு பிரிவின் ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறை ஐஜியாகவும், அன்பு ஐஜியாக பதவி உயர்வு பெற்று சென்னை காவல்துறை நிர்வாக பிரிவு ஐஜியாகவும், மகேஷ் குமார் ரத்தோட் ஐஜியாக பதவி உயர்வு பெற்று போலீஸ் அகாடமியில் ஐஜியாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்...


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)