திமுகவின் தீர்மானத்துக்கு வந்த சோதனை.. ஸ்டாலின் கனவு நிறைவேற இப்போதைக்கு நோ சான்ஸ்.

சென்னை: அதிமுகவுக்கு போதிய பலம் இருப்பதால் சபாநாயகருக்கு எதிரான திமுக கொண்டுவரும் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியையே தழுவும் என்ற சூழலே நிலவுகிறது. இதனால் தேர்தலுக்கு முன்பான ஆட்சி மாற்றம் என்ற திமுக தலைவர் ஸ்டாலின் கனவு பலிக்க வாய்ப்பே இல்லை என்று தெரிகிறது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி கலைச்செல்வன், ரத்னசபாபதி, மற்றும் பிரபு உள்ளிட்ட மூன்று எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீஸை சட்டமன்ற செயலாளரிடம் திமுக அளித்தது. திமுகவின் மனுவை ஏற்று சபாநாயகர் தனபாலுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் வரும் ஜூலை 1ம் தேதி கொண்டுவரப்படுகிறது. இதில் ஆளும் அதிமுகவுக்கு 123 உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது. திமுகவுக்கு உறுப்பினர்களும், அதன்கூட்டணி கட்சிகளான காங்கிரசுக்கு 7 உறுப்பினர்களும், முஸ்லீம் லீக்குக்கு ஒரு உறுப்பினரும் உள்ளனர். இதன் மூலம் திமுக கூட்டணியின் பலம் 108 ஆக உள்ளது. அமமுகவுக்கு ஒன்று உள்ளது. இரண்டு இடங்கள் காலியாக உள்ளது. சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற 117 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற சூழலில் திமுகவுக்கு 108 இடங்களே உள்ளதால் வெற்றி பெற வாய்ப்பு இல்லை.. அமமுகவில் குழப்பமான சூழல் காணப்படுவதால் மேற்கொண்டு யாரும் அதிமுகவில் இருந்து அமமுகவுக்கு செல்வதற்கு வாய்ப்பு இல்லை. எனவே திமுக கொண்டுவந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் போதிய உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் தோல்வி தழுவும் சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக தேர்தலுக்கு முன்பாக ஆட்சி மாற்றம் என்ற ஸ்டாலின் கனவு இப்போதைக்கு நிறைவேறுவதற்கு வாய்ப்பு இல்லை. இன்னும் குறைந்த பட்சம் ஸ்டாலின் ஒன்றரை வருடங்கள் காத்திருந்தால் தான் தேர்தலை சந்தித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதுவரை காத்திருக்க வேண்டிய நிலையே திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)