விமானப்படை வீரரின் உடல் அடக்கம் கோவை

“ஏ.என். 32 ரக போர் விமான விபத்தில் உயிரிழந்த விமானப்படை வீரர் வினோத் ஹரிஹரனின் உடல் கோவையில் உள்ள அவரது பெற்றோர் இல்லத்திற்கு இன்று கொண்டுவரப்பட்டது. இராணுவ மரியாதையுடன் மூன்று முறை 11 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.” கடந்த 3-ம் தேதி, அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து அருணாச்சலப்பிரதேசம் சென்ற இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏ.என். 32 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 13 வீரர்களும் உயிரிழந்தனர் என்ற அதிர்ச்சித் தகவல் கடந்த வாரம் வெளியானது. விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்த வீரர்களின் புகைப்படங்களை விமானப்படை வெளியிட்டப் பிறகு, அந்த கோர விபத்தில் மரணமடைந்த 13 வீரர்களில் கேரளாவைப் பூர்வீகமாக கொண்ட வினோத் ஹரிஹரனும் ஒருவர் என்பது தெரிய வரவே... கோவையில் வசித்து வந்த அவரது குடும்பம் பயங்கரமான அதிர்ச்சியில் மூழ்கியது. கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட வினோத் ஹரிஹரன், கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பொறியியல் படிப்பு முடித்துவிட்டு, கடந்த 2011-ல் விமானப்படையில் சேர்ந்தவர். இந்திய விமானப்படையில் ஸ்குவாட் லீடராகப் பணியாற்றி வந்த அவர், கடந்த ஆண்டு கேரளாவைப் புரட்டிப்போட்ட வெள்ளத்தின் போது, இந்திய விமான படை சார்பில் நடைபெற்ற மீட்பு பணியில் சிறப்பாக செயலாற்றியவர். இராணுவத்தில் இருந்த அப்பா, விமானப்படையில் சேர்ந்த அண்ணன் ஆகியோரைத் தொடர்ந்து ஒரே குடும்பத்திலிருந்து, மூன்றவாது நபராக நாட்டுக்குச் சேவை ஆற்ற விமானப்படைக்கு புறப்பட்டு வந்தவர் வினோத் ஹரிஹரன். இரண்டரை ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் முடிந்தது. கோவை சூலூர் விமானபடையில் பணியாற்றிய வந்த வினோத். கடந்த 7 மாதங்களுக்கு முன்புதான் அஸ்ஸாமிற்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த சூழலில்தான் வினோத்திற்கு இப்படி ஒரு எதிர்பாரத மரணம் நிகழ்ந்திருக்கிறது. நீண்ட தேடுதலுக்குப் பிறகு, விமான விபத்தில் உயிரிழந்த 13 வீரர்களின் உடல் பாகங்களும் மீட்கப்பட்டு அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டது. வினோத் ஹரிஹரனின் உடல், கோவை சிங்காநல்லூரில் உள்ள அவரது பெற்றோர் இல்லத்திற்கு இன்று கொண்டு வரப்பட்டது. திருமணமான மூன்று வருடங்கள்கூட முடிவடையாத நிலையில், தனது கணவர் இறந்த செய்தியைக் கேட்டு தீராத துக்கத்தில் இருந்த வினோத்தின் மனைவி, 'தனது கணவர் தேசியக் கொடி போர்த்தப்பட்ட பெட்டியில் அடைக்கப்பட்டு வருவதைக் கண்டு கதறித்துடித்தார். வினோத்தின் பெற்றோர்களும் உறவினர்களும் வேதனையில் வெடித்து அழுதார்கள். இந்தக் காட்சிகள் அருகிலிருந்த அனைவரையும் சோகத்தில் மூழ்கடித்தது. உறவினர்களின் கதறலுக்கு மத்தியில் வினோத்தின் உடலுக்கு விமானப்படை வீரர்களும், அப்பகுதி மக்களும் அஞ்சலி செலுத்தினர். பின்பு,வினோத் ஹரிஹரன் உடல் அவரது வீட்டிலிருந்து சிங்காநல்லூர் பகுதியில் உள்ள மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, வினோத்தின் சகோதரரும் விமானப்படை வீரருமான விவேக். தனது தம்பிக்கு தங்களது குடும்ப முறைப்படி இறுதி சடங்குகளைச் செய்தக் காட்சி, அங்கு சூழ்ந்திருந்த ஒட்டுமொத்த விமானப்படை வீரர்களையும் மேலும் இறுக்கமாக்கியது. விமானப்படை உயர் அதிகாரிகளும், இராணுவ உயர் அதிகாரிகளும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்பு, கோவை மாநகர சட்ட ஒழுங்கு காவல் உதவி ஆணையர் அஞ்சலி செலுத்தினார். பின்னர்மூன்று முறை 11 குண்டுகள் முழங்க முழு இராணுவ மரியாதையுடன் வினோத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)