உலக போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்

26.06.19 திண்டுக்கல் மாவட்டம் ஜூன் 26 உலக போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் முன்பு திண்டுக்கல் மாவட்ட போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு சார்பாக சர்வதேச போதைப் பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியை திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் உயர்திரு.ஜோஷி நிர்மல்குமார் இ.கா.ப அவர்களும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.சக்திவேல் அவர்களும் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இப்பேரணியில் திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர்கள், G.T.N கலைக் கல்லூரி மாணவர்கள், புனித வளனார் பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகள், புனித மரியன்னை பள்ளி மாணவர்கள், மற்றும் டட்லி பள்ளி மாணவர்கள் மொத்தம் 700 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட பேரணியில் போதைப்பொருள் பயன்படுத்துவதை தவிர்க்கும் விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியும் விழிப்புணர்வு செய்தனர்..


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)