மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் பேசியதாக ஒரு ஆடியோ

தினகரன் தலைமையிலான அமமுகவின் முக்கிய தூண்களில் ஒருவரான பழனியப்பனை திமுகவுக்கு இழுக்கும் வகையில் அக்கட்சித் தலைவர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் படுதோல்விக்குப் பின்னர் தினகரனின் கூடாரம் காலியாகி வருகிறது. அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன், தினகரனை ஆபாசமாக விமர்சித்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதனால் தங்க தமிழ்ச்செல்வனை அமமுகவில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளார் தினகரன். அதிமுக, திமுக அல்லது திவாகரனின் அதிகவுக்கு தங்க தமிழ்ச்செல்வன் தாவக் கூடும் என கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் தினகரனின் வலதுகரமாக இருக்கும் பழனியப்பனை திமுக வளைத்துவிட்டதாக ஒருதகவல். இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனே பழனியப்பனிடம் பேரம் பேசியதாக ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. டிடிவி கட்சி தலைவர் போலா செயல்படுகிறார்.. ஏதோ பயங்கரவாதிகளின் தலைவரால்ல இருக்காரு.. தங்கதமிழ்செல்வன் இந்த ஆடியோவின் உண்மை தன்மை எதுவென தெரியவில்லை. அதில், பழனியப்பன் வசம் சில சட்டசபை தொகுதிகள் ஒப்படைக்கப்படும். அவரே வேட்பாளர்களை முடிவு செய்யலாம் என கூறப்பட்டிருக்கிறதாம். இந்த தகவல் திமுக வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.அதிமுக, அமமுகவில் இருந்து வருபவர்கள்தான் திமுகவின் தீர்மானிக்கும் சக்திகள் என்றால் காலம் காலமாய் சிங்கிள் டீ குடித்து கொண்டு கட்சி வேலைபார்க்கும் எங்களுக்கு இங்கே மதிப்பே இல்லையா என கொந்தளிக்கின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)