சுவிட்சர்லாந்து வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் பணம் ரூ.6,757 கோடி

இந்தியர்களின் சுவிட்சர்லாந்து வங்கிகளில் ஏராளமான வெளி நாட்டினர் தங்கள் பணத்தை சேமித்து வருகின் றனர். சேமிப்பாளர்களின் பெயர் விவரங் களை வெளி யிடாமல் பாதுகாத்து வரும் இந்த வங்கிகளில் ஏராளமான இந்தியர்களும் (தனிநபர் மற்றும் நிறுவனங்கள்) கோடிக்கணக்கான பணத்தை சேமித்து வருகின்றனர். இவ்வாறு வெளிநாட்டினர் தங்கள் நாட்டு வங்கிகளில் சேமித்து வரும் பணம் குறித்த விவரங்களை சுவிட்சர்லாந்து மத்திய வங்கி ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டு  சுவிட்சர்லாந்து வங்கிகளில் இருந்த வெளிநாட்டினரின் மொத்த தொகை குறித்த புள்ளி விவரங்களை நேற்று வெளியிட்டது. அதன்படி கடந்த 2018ம் ஆண்டில் அந்த நாட்டு வங்கிகளில் இருந்த இந்தியர்களின் மொத்த சேமிப்பு தொகையின் மதிப்பு 955 மில்லியன் 1 ரோபோ அகச் சிவப்புக் கதிர்கள் மூலம் ரோபோவுக்கு அக்காமோ கண்டறிந்து உடனடியாக அழிக்கும் இதை தொடர்ந்து கொண்டது. மேலும் இது பயிர்களுக்கு எந்த கொண்ட இந்த சுவிஸ் பிராங் (சுமார் ரூ.6,757 கோடி) ஆகும். இது முந்தைய ஆண்டைவிட 6 சதவீதம் குறைந்து உள்ளது. மேலும் இது கடந்த 1995ம் ஆண்டுக்குப்பின் 2வது மிகப்பெரிய சரிவு எனவும் தெரியவந்துள்ளது. அதேநேரம் இந்தியர்கள் அல்லது வெளிநாடு வாழ் இந்தியர்கள், வெளிநாட்டு நிறு வனங்களின் பெயரில் சேமிக்கும் பணம் இதில் அடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதைப்போல் சுவிட்சர்லாந்து வங்கிகளில் சேமிக்கப் பட்டு உள்ள பாகிஸ்தானியர்களின் பணமும் 3ல் ஒரு பங்கு குறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங் களின் பணமாக 744 மில்லியன் சுவிஸ் பிராங் (சுமார் ரூ.5,300 கோடி) மட்டுமே கடந்த ஆண்டில் இருந்தது தெரியவந்துள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்