இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனம் முப்பெரும்விழா

ஜமால் முகமது கல்லூரியில் இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனம் முப்பெரும்விழா! திருச்சி இனாம்குளத்தூர் இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனத்தின் தொடக்கம், கவிக்கோ அப்துல்ரகுமான் நூலகத் திறப்பு மற்றும் வரலாற்றில் வாழ்பவர்கள் மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு ஆகிய முப்பெரும்விழாஜமால் முகமதுகல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் இ.ஷாஹுல் ஹமீது ஜமாலி தலைமை வகித்தார். சுவாமித்தோப்பு பாலபிரஜாபதி அடிகளார் ஆராய்ச்சி நிறுவனத்தைத் திறந்து வைத்தார். தொடர்ந்து கவிக்கோ அப்துல்ரகுமான் நூலகமும் திறந்து வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வரலாற்றில் வாழ்பவர்கள் நூலை இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்சையது அலி மெளலானா வெளியிட, அதன் முதல் பிரதியை கறம்பக்குடி ஏ.எம்.கலீபுல்லாஹ் மற்றும் வாணியம்பாடி அக்பர் கவுசர், ஜமால் முகம்மது கல்லூரிச் செயலர் ஏ.கே. காஜா நஜ்முதீன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நூலை திரைப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் ஆய்வு செய்து பேசினார். இதைத் தொடர்ந்து விழா சிறப்பு மலரை புதுச்சேரி சட்டப் பேரவைத் தலைவர் ரா.சிவக்கொழுந்து வெளியிட அதன் முதல் பிரதியை கறம்பக்குடி பி.ஏ.சதக்கத்துல்லாவும் ,இலங்கை ஹாஜிம் உமர், ஜமால் முகம்மது கல்லூரி முதல்வர் எஸ்.இஸ்மாயில் முகைதீனும் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து, விடுதலைப்போரில் இஸ்லாமியர்களின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கமும், இந்திய விடுதலையில் முஸ்லிம்களின் வரலாறுகளை வெளிக்கொணர்ந்த அறிஞர்களுக்குப் பாராட்டு விழாவும் நடைபெற்றது.மாவீரர் திப்பு சுல்தானின் 10- ஆவது தலைமுறைப் பேரன் பக்தியார் அலி ஷாவுக்கும், விடுதலைப் போராட்ட தியாகி ராமநாதபுரம் மாவட்டம், அமீர் ஹம்சாவின் மகள் பல்கீஸ் சுலைகாவுக்கும் இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் அதன் நிறுவனர் இ.ஷாஹுல்ஹமீது, சிங்கப்பூரை சேர்ந்த ஏ.எம்.சாகுல்ஹமீது, இனாம் குளத்தூர் எம்.ஜே.எம்.மெட்ரிக் பள்ளி தாளாளர் எஸ்.பலுலுர் ரஹ்மான் ஆகியோர் பொற்கிழியை பரிசாக வழங்கினார்கள். இவ்விழாவில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் கே.எம்.ஷெரீப், ஊடகவியலாளர் வீரபாண்டியன், பேராசிரியர்கள் அருணன், அ.மார்க்ஸ் ஆகியோர் பேசினார்கள். விடுதலைப் போராட்டத் தியாகிகளின் தியாகச் செயல்கள் குறித்து நாஞ்சில் சம்பத் பேசினார். விழாவில் காங்கிரஸ் கட்சியின் ஊடகத்துறை தலைவர் ஏ.கோபண்ணா , எஸ்.டி.பி.ஐ. அமைப்பின் தேசியத் துணைத் தலைவர் தெஹ்லான் பாகவி, இந்திய தேசிய லீக் மாநிலத் தலைவர் எம்.பஷீர் அகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர் இதில் கலந்துகொண்ட ஜமால் முகமது கல்லூரி முதல்வர் இஸ்மாயில் செயலாளர் காஜா நஜிமுதீன் துணை முதல்வர் ஜமால் முஹம்மது ஜமால் முகமது கல்லூரி ஆலிம் பெருமக்கள் திப்பு சுல்தானின் வாரிசான பேரன்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)